Friday, April 13, 2012

நமது இந்தியாவின் இன்றைய நிலை-2


நமது இந்தியாவின் இன்றைய நிலை-2

1980 வாக்கில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.பாகிஸ்தானில் 14 வயது முஸ்லீம் சிறுவன் ஒருவனை கிறிஸ்தவப்பாதிரிகள் கிறிஸ்தவனாக மதம் மாற்றிவிட்டனர்.(பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக்குடியரசு என்பதை மறக்காதீர்கள்.அங்கு இந்துக்கள் சிறுபான்மையினர்.இந்துக்களுக்கு மாநில அரசில் கூட வேலை கிடையாது)உடனே உள்ளூர் மத அமைப்பான ஜமா அத் அந்த 14 வயது முஸ்லீம் சிறுவனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது.

கிறிஸ்தவப்பாதிரியார்கள் மாவட்டக் கோர்ட்டை அணுகி ‘நியாயம்’ கேட்டனர்.மாவட்டக்கோர்ட் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது.இந்த வழக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.சுப்ரீம் கோர்ட்டும் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது.

தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு சில நாட்கள் இருக்கும்போது அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டது.அந்த 14 வயது பாகிஸ்தானைச்சேர்ந்த முஸ்லீம் சிறுவன் கிறிஸ்தவனாக மாறிய ஒரே காரணத்துக்காக அமெரிக்காவிலிருந்து தனி விமானம் பாகிஸ்தானுக்கு வந்தது.அந்த சிறுவனை அழைத்து அமெரிக்காவிற்குச் சென்றது.அவனுக்கு அமெரிக்கக்குடியுரிமை உடனே வழங்கப்பட்டது.

ஆக, இந்துக்களாகிய நம்மைத் தவிர இந்தபூமியில் ஒவ்வொரு நாடும் மதக்கண்ணோட்டத்துடன் தனது மதத்தைக் கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வருகிறது.ஆனால், நாம் இந்துக்கள் என்ற பெருமைப்படாமல் நமதுமதத்தை அழிக்கும் அரசியல்வாதிகளை நம்மை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
உலகின் எல்லா மதங்களையும் விட நமது இந்து மதம் எவ்வ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை இந்த வலைப்பூவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

நாம் ஏன் சொரணை கெட்ட ஜன்மங்களாக இருக்கிறோம்?
நாம் ஏன் நமது இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நண்பர்களிடம் கூட சொல்வது இல்லை? (இந்த வேலையைச் செய்துவருவதுதான் இந்து இயக்கங்கள்।அதனால் தான் சீனாவின் வாலாகிய கம்யூனிஸ்டுகள் இந்து இயக்கங்களை கடுமையாக எதிர்க்கின்றன)
நமது சித்தி அல்லது நண்பன் அல்லது உறவினர் கிறிஸ்தவராக மாறுவதை ஏன் தடுப்பதில்லை?

No comments:

Post a Comment