Friday, April 20, 2012

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன?பாகம் 2 லிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்:பகுதி 2


இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன? பாகம் 2 இலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்


புரிந்து கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் = இதுதான் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ பின்பற்ற வேண்டிய விதிமுறை.
நிச்சயம் ஒரு கணவனைப்போலவே,அவனது மனைவியின் குணம் இருக்காது.அதே போலத்தான்,ஒரு மனைவியைப் போலவே அவளின் கணவனின் குணம் இராது.இருந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இராது.

வேர்கள் நன்றாக இருந்தால்தானே, மரத்தின் கனிகள் நன்றாக இருக்கும்.வேரே இல்லாவிட்டால் காய்கூட மிஞ்சாது இல்லையா?

அந்த மணமகளின் வயது 31.படிப்போ எம்.பில்., நாம் படிக்கும் புத்தகப் படிப்பும்,மெக்காலே கல்வித்திட்டமும் நம்மை ஈகோ நிறைந்த மனிதனாக மாற்றியுள்ளது.

அந்த மணமகளின் ஆறாம் வகுப்பிலிருந்து, எம்.பில்., படிப்பு வரையிலும் முதல் மாணவியாகவே வந்திருக்கிறாள்.
யோசியுங்கள்.
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
பதினொன்றாம் வகுப்பு
பனிரெண்டாம் வகுப்பு

முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு
இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு
மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு

முதலாம் ஆண்டு முதுகலை/அறிவியல் படிப்பு
இரண்டாம் ஆண்டு முதுகலை/அறிவியல் படிப்பு

எம்.பில்.,
(ஒரு வரிக்கு ஒரு வருடம் என பனிரெண்டு ஆண்டுகள் என நினைத்துக்கொள்ளவும்.மனிதனின் வாழ்க்கையில் 12 ஆண்டுகள் மிக முக்கியமானது)

சுமார் 12 வருடமாக இந்தப் இளம்பெண் படிப்பில் தோல்வியே என்னவென்று பார்க்க வில்லை;அந்த வெற்றி அவளது மனதை திமிராக,யாருக்கும் அடங்காத,யாரையும் மதிக்காத மன நிலையை உருவாக்கியிருக்கிறது.
அதே சமயம் எல்லோரும் தன்னை மதிக்கும் மனநிலையை உருவாக்கியுள்ளது.அப்படி மதிக்காதவர்களிடமிருந்து மரியாதையை பிடுங்கும் ரவுத்திரகுணத்தைத் தந்திருக்கிறது.

மேல்நிலைப் படிப்பு படித்த கல்லூரியிலேயே வேலையும் கிடைத்திருக்கிறது.சில வருடங்களிலேயே தனது துறையில் தற்காலிக துறைத் தலைவர் பதவியும் கிடைத்திருக்கிறது.
திருமணமாகும் வருடத்தில் துறைத் தலைவராகவே உயர்ந்துவிட்டாள்.

கல்லூரியில் தனது சக ஆசிரியர்/ஆசிரியைகளை மதிப்பதேயில்லை.எல்லோரையும் எடுத்தெறிந்து பேசியே பழக்கம்.அப்படி பேசும்போது,உரியவர்கள் அவமானத்தால் அதிர்ச்சியடைவதைப் பார்த்து உள்ளுக்குள் ரசித்திருக்கிறாள்.பின்பு அதுவே தனது ஈகோவுக்கு தீனிபோடத் துவங்கியிருக்கிறது.

இந்நிலையில் ஒரு குக்கிராமத்திலிருந்து விரிவுரையாளர் வேலைக்கு ஒருவன் வந்தான்.வந்த முதல் நாளே,இவளின் சுபாவத்தை ‘படித்து’விட்டான்.விளைவு?
எல்லோரும் இவளைப் பார்த்து பயப்பட,இவனோ,இவளை = நம்முடைய மணமகளை/இளம்பெண்ணை மதிப்பதே இல்லை.

இது போதாதா? ‘இவனது மரியாதையைப் பெற’ இவனிடம் அடிக்கடி சண்டை போடத் துவங்கியிருக்கிறாள்.மோதல் காதலாகி கருக்கலையும் வரை சென்றிருக்கிறது.ஒருமுறை மட்டுமல்ல; நான்கு அல்லது ஐந்து முறை இவனால் மட்டுமே கருக்கலைத்திருக்கிறாள்.இது இவளது பெற்றோருக்கும் தெரியும்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது அறையில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது மட்டுமே இவளுக்கு பொழுதுபோக்கு.பக்கத்துவீட்டினரையும் மதிப்பதில்லை; அவர்களையும் எடுத்தெறிந்து பேசுவது இவளது சுபாவம்.

நமது மணமகனின் சுபாவத்தைப் பார்ப்போம்:
பள்ளிப்படிப்பிலிருந்தே கணக்கில் புலி; பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவன்.பல சமயம் எதற்கு இவன் கோபப் படுவான் என்பதே யாராலும் யூகிக்கவே முடியாது.ஒழுக்கத்தைப் பற்றி மிகவும் பரவலாக பேசுவான்;நிர்வாணப்படங்களை/வீடியோக்களைக் கொடுத்தால்/பார்த்தால் மிகவும் ரசிப்பான்(இது ஒன்றும் மாபெரும் குற்றமல்லை இல்லையா?)

இதுவரை கொடுத்த தகவல்கள் படி மணமகனைப் பற்றியும்,மணமகளைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காமெண்டு பகுதியில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.விரிவான விளக்கம் விரைவில். . .

No comments:

Post a Comment