Thursday, March 18, 2010

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

Tuesday, July 15, 2008
வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!
வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்பொழுதே அவர்கள் ஏசுவின் நற்செய்தியை விசுவசிப்பவர்களாக மட்டுமல்ல, உலகளாவிய மதமாற்ற பிரசாரத்திற்குத் துணை போகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பின் வலைத்தளம் தெளிவாகவே அறிவிக்கிறது.
Vodaphone (முன்னாள் Hutch) வாடிக்கையாளர் முகவரிகளை இந்த அமைப்புக்கு அங்குள்ள கிறிஸ்தவ உயர் அதிகாரியே கடத்தியிருக்கிறார்.
அகில உலக புத்தசபை இந்த அமைப்பைப் பற்றி அபாய அறிவிப்பு அளித்துள்ளது.
ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.
நன்றி:www.tamilhindu.com

No comments:

Post a Comment