Thursday, March 11, 2010

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒருமுக்கிய வேண்டுகோள்:

இந்தியாவின் பலமே குடும்பம் என்ற அமைப்புதான்.தமிழ்நாட்டில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து வருகிறது.நமது தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் குடும்ப அமைப்பின் அடிப்படைக்கட்டுமானம் தகர்ந்துவருகிறது.ஒருவனுக்கு ஒருத்தி என்பது குறைந்துவருகிறது.தொழில் நுட்பவளர்ச்சி,செல்போன்களின் பரவல்,இணையத்தின் ஊடுருவல்,வேகமான வாழ்க்கை,உலக மயமாக்கலின் அசுரத் தாக்குதல் இவற்றால் கி.பி.1995 ஆம் ஆண்டுமுதல் திருமணமானவர்களில் 1000 குடும்பத்திற்கு 700 குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தவம் கிடக்கின்றனர்.

திருமணம் ஆன சில வாரங்கள்,சில மாதங்கள்,சில வருடங்களில் சில பல காரணங்களால் கணவனும் மனைவியும் பிரிந்துவிடுகின்றனர்.இதில் பெரும்பாலும் பணத்தாசை முதலிடத்திலும், காமரீதியானப் பிரச்னைகள் இரண்டாமிடத்திலும் இருந்து மணவிலக்காகிய டைவர்ஸீக்குக் காரணங்களாக அமைகின்றன.பெரும்பாலான கணவன் மனைவிக்கு குடும்பம் என்பது “புரிந்துகொள்ளுதலும்,விட்டுக்கொடுத்தலும்” என்ற அஸ்திவாரத்திலேயே குடும்பம் இயங்கும் என்பது தெரியவில்லை.விளைவு?
அப்பாவின் அருகாமை தெரியாத மகள்களும்,அம்மாவின் வாசம் உணராத மகன்களும் உடைய புதிய சமுதாயம் உருவாகிவருகிறது.எப்போது ஒரு மனைவி தனது கணவனைத்தவிர, இன்னொருவனை கணவனாக அல்லது கள்ளக்காதலனாக ஏற்றுக்கொள்ளுகிறாளோ அப்போதிருந்தே அவள் நிம்மதியாக வாழுவாள் என்பதற்கு எந்த விதமான கியாரண்டியும் கிடையாது.அப்படி இருந்தால் அவளுக்கு கடவுள் ஆசிர்வாதம் இருக்கிறது என்றே பொருள்.


அதே சமயம்,மனைவியால் மனைவியின் ஆக்ரோஷத்தால் டைவர்ஸ் கிடைக்காத கணவன்மார்கள் பட்டியல் இன்று தமிழ்நாட்டில் மட்டும் சில பல லட்சங்களைத் தொடும்.
இதற்கு திருமணப்பொருத்தம் பார்க்கும் விதம் ஒரு முக்கியக்காரணம் ஆகும்.


தமிழ்நாட்டின் இளைஞர்கள் திருமணவிஷயத்தில் தனது பெற்றோரை முழுமையாக நம்புவது இன்றும் மரபாக இருக்கிறது.(இளைஞர்கள் ஓரளவு மாறிவருவது நல்லதுதான்) ஆனால்,மாறிவரும் தனிமனித வாழ்க்கைச்சூழலில் தனது மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலான பெற்றோர்கள் தோற்றுவிடுகிறார்கள்.இதேநிலைதான் மணமகள் வீட்டிலும்! (பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகனை நல்ல விலைக்கு விற்கத்தான் தயாராக இருக்கிறார்கள்.பெண்ணைப் பெற்றவர்களும் தனது மகளை குறைந்த விலைக்கு எவனிடமாவது தள்ளிவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதனால்,இந்த நூற்றாண்டு முடியும் முன்பு,அட அந்த அளவுக்கு மிகத்தாமதமெல்லாம் வேண்டாமே.கி.பி.2020க்குள்ளாகவே திருமணம் என்பது மியூசியத்தில் இருக்கும் ஒரு அழிந்துபோன மரபு என்ற நிலை வந்துவிடும்) ஏன் இப்படி?


வெறும் திருமணப்பொருத்தம் பார்க்க நீங்கள் எனக்கு ஒரு போன் செய்தால் போதும்.சில நிமிடங்களில் திருமணப்பொருத்தம் செல்போனிலேயே கூறிவிடலாம்.ஆனால்,அதுமட்டும் போதாது.

ஜோதிட நிலையங்களும் எப்போதும் நிரம்பி வழிகின்றன.திருமணப்பொருத்தத்தில் சில நிமிடங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறு ஒரு இளைஞன் அல்லது ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிடுகிறது.எனவே,நீங்கள் உங்கள் வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டால்,நமது ஆன்மீகக்கடலுக்கு ஒருமுறை மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த ஜாதகத்தை அனுப்பி பரிசீலினை செய்து கொள்ளவும்.பதில் விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கும்.(பணத்தில் அடிப்படையில்தான் இன்றைய காலகட்டத்தில்பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.அப்படிப்பட்டவர்கள் தயவு செய்து உங்கள் வீட்டு வரன்களின் பிறந்த ஜாதகத்தை அனுப்ப வேண்டாம்.பணத்தினால் எல்லாப்பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம்)

அப்பாவின் கண்டிப்பை அறியாமல் வளரும் ஆண் குழந்தையும்,பெண் குழந்தையும் நிச்சயம் மனிதத்தன்மை இல்லாமல்தான் வளரும்.ஒழுக்கத்தினைப் பற்றிக்கூறவே வேண்டாம்.ஆக,ஒரு வக்கிரமான,ரவுடித்தனம் நிறைந்த,ஒழுங்கற்ற சமுதாயத்தை உருவாக்கிவருகிறோம்.முடிந்தவரையிலும், நமது ஆன்மீகக்கடல் மூலமாக இந்த மோசமான சமுதாய உருவாக்கத்தை நிறுத்திட முயலுவோம்.

எனவே, நமது ஆன்மீகக்கடலின் துணை வலைப்பூவாக திருமணம் மற்றும் மறுமணம் தொடர்பான வலைப்பூ துவங்கலாம் என்ற பரிசீலினை இருக்கிறது.வாசகர்களாகிய நீங்கள் இது தொடர்பாக உங்களது மேலான கருத்துக்களை நமது ஆன்மீகக்கடலுக்கு அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment