Friday, March 5, 2010

இந்தியாவை நேசிப்பவர்களே! மாவோயிஸ்டுகளின் பேராசையைப் பாருங்கள்

வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் ஒட்டு மொத்த இந்தியாவை கைப்பற்றுவதே மாவோயிஸ்டுகளின் திட்டம் என்று மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.



மாவோயிஸ்டுகள் தற்போது அறிவித்துள்ள சண்டை நிறுத்தம், தங்களை பலப்படுத்திக்கொண்டு மீண்டும் ஒன்றிணைவதற்காகத்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.



"
இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தின் நிலை" என்ற தலைப்பில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், மாவோயிஸ்டுகள் தங்களது மேற்கூறிய திட்டத்திற்காக வலுவான இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு சில முன்னாள் இராணுவ வீரர்கள் உதவி வருவதாகவும் கூறினார்.



"
இன்றைக்கு அல்லது நாளைக்கோ இந்தியாவை கைப்பற்றிவிட வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நினைக்கவில்லை.அவர்கள் விடுத்துள்ள சுற்றறிக்கை மற்றும் புத்தகங்கள் மூலம் 2050 அல்லது 2060 ஆம் ஆண்டு வாக்கில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது.



ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரத்தின் தலையின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை.எனவே அவர்கள் தங்கள் திட்டத்தை மிக மெதுவாகவே செயல்படுத்துவார்கள்.



ஒரு நாட்டின் இராணுவப் படை போன்று மாவோயிஸ்டுகள் மிக நன்றாகவே பயிற்சி பெற்றுள்ளனர்.அவர்களுடன் சில முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.



இதை நான் சொல்ல காரணம், மாவோயிஸ்டுகள் எந்த தாக்குதலை நடத்தினாலும், அந்த தாக்குதலின் ஒட்டுமொத்த நடவடிக்கை குறித்தும் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.அவர்களது இந்த பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு ஒரு நாட்டின் இராணுவம் மேற்கொள்வதைப் போன்று உள்ளது" என்று பிள்ளை மேலும் தெரிவித்தார்.

நன்றி:தமிழ் வெப்துனியா 5.3.2010 இந்த மாவொயிஸ்டுகளுக்கு நமது அண்டைநாடு கொள்கையளவில் ரகசியமாக உதவிசெய்யும்.ஏனெனில்,அந்த அண்டைநாடு நம்மிடம் மட்டுமல்ல;ஆசியாவின் பல நாடுகளின் நிலப்பரப்பு,கடல்பரப்பு,தீவுகளை சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.நாம்தான் இன்னும் நடுநிலை என்ற உருப்படாத கொள்கையை தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment