Saturday, March 13, 2010

திருக்கையிலாயம் மானசரோவரின் தினமும் நள்ளிரவு 2.00 மணிக்கு நிகழும் அதிசயம்


மானசரோவரில் நிகழும் நள்ளிரவு அதிசயம்

தினமும் திருக்கையிலாய மலைக்கு அருகில் இருக்கும் மானசரோவர் ஏரியில் நள்ளிரவில் ஒரு அதிசயம் நடைபெற்றுவருகிறது.
“அங்கே நிகழ்வது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.வேறு கிரகத்திலிருந்து போக்குவரத்து அந்த நேரத்தில் அங்கே இருக்கிறது.அதனால்,விடிகாலை இரண்டு மணி போல அங்கே நீர் அருகே செல்லாதீர்கள்.அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.தள்ளி நின்று பாருங்கள்.புகைப்படம் எடுத்தல்,சப்தம் போட்டுப் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.”என்று சத்குரு ஏற்கனவே சொல்லியிருந்ததால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.
குளிர் பிடுங்கித் தின்றது.நாய்களின் ஓலங்கள் எதிரொலித்தன.
மணி 1.30 ஆயிற்று.நள்ளிரவு 2.00 ஆயிற்று.ஒன்றும் நிகழவில்லை.கால் கடுக்க நின்றிருந்தோம்.அங்கே எதுவும் நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.அவர்கள் நமக்காக கண்காட்சி நடத்தவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
சரியாய் நள்ளிரவு 2.30 மணிக்கு அந்த அதிசயம் நிகழ்ந்தது.வானத்தில் அண்ணாந்து பார்த்த போது உலகில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் ஒன்று கூடி மானசரோவருக்கு மேலாக வந்தது போல் தோன்றியது.ஆமாம்,குவியல் குவியலாக கோடி நட்சத்திரங்கள்.
மின்னல் போல் ஒளி மானசரோவர் நீரில் பாய்ந்தது.இடி இடித்தது.நாய்களின் கூக்குரல் காணாமல் போயிருந்தன.எரிநட்சத்திரம் போல சில சரலென ஏரி நீரில் விழுந்தன.வெளிச்சம் அதிகரித்தது.
இதைப் பார்த்த என் உள்ளம் உருகியது.நெஞ்சம் நெகிழ்ந்தது.
நன்றி:குமுதம் பக்கம் 119,நாள் 10.3.2010

No comments:

Post a Comment