Monday, March 29, 2010

சென்னையில் ஒரு 2012

சென்னையில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

ஒருவனுக்கு ஒருத்தி; மானமும் வீரமும்; இந்த வாசகங்களை தனது உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இனமே நம் தமிழ் இனம் ஆகும்.அப்படிப்பட்ட தமிழ் இனத்தின் தலைநகர் சென்னையாகும்.
சென்னையில் ஐ.டி.நிறுவனங்கள் கால் பதித்தப்பின்பு, முறையற்ற காமம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

எனவே, கி.பி.2015க்குள் சென்னையின் பல பகுதிகள் கடலோரமாகப்போகின்றன.எனவே, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வேலைக்குச் சென்ற இளைஞன்,இளம்பெண்களே! சென்னையில் வீடு,மனை வாங்காதீர்கள். உங்கள் சொந்த ஊரில் வாங்குங்கள்.
விரைவில் காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு துறைமுகமாகப்போகிறது.இது ஜோதிடக்கணிப்பும்,வானியல் கணிப்பும் சேர்ந்தது.விரைவில் சென்னையில் ஒரு 2012 வரப்போகிறது.எந்தப்பரிகாரத்தாலும்,சென்னையைக் காப்பாற்ற முடியாது.

7 comments:

  1. என்னங்க இப்பிடி பயமுறுத்தறீங்க.? நேற்றுதான் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் " நாம சென்னையில் ஃப்ளாட் வாங்கலாமான்னு " கேட்டு நாங்களும் யோசிச்சு சொல்றதா சொன்னோம்.
    அவங்களுக்கு இந்த செய்தியை சொல்றதா வேண்டாமான்னு குழம்பி போய் இருக்கேன்!

    ReplyDelete
  2. ***இது ஜோதிடக்கணிப்பும்,வானியல் கணிப்பும் சேர்ந்தது.***
    அப்படியே நடக்கட்டும்! அது என்ன தோதிட கணிப்புனு கொஞ்சம் விளக்குங்களேன்?

    ReplyDelete
  3. yen IT niruvanangal varuvatharkku mumbu chennai enna punniya thalamaa??? etharkkeduththaalum IT niruvanangalaye kurai solvathu vaadikkaiyaagi vitathu....

    ReplyDelete
  4. பீமா அவர்களே, ஐ.டி.நிறுவனங்கள் வரும் முன்பு சென்னை புண்ணியத்தல்மாக இருக்கவில்லை என்பது உண்மைதான்.400 டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு சராசரியாக ரூ.20,000/-ஆகிறது.இதற்காக,இந்தத் தொகை நமக்கு வரப்பிரசாதமாகத் தெரிகிறது.
    அதேசமயம் இந்தத் தொகைக்காக,அமெரிக்கப் பண்பாடான யார் வேண்டுமானாலும்,யாரிடம் கூடவும்,எத்தனை முறையும் அனுபவிக்கலாம் என்பதை ஏன் கொண்டு வருகின்றன?அல்லது கண்டுகொள்வதில்லை.செக்ஸ் ஹாரர்ஸ்மென் ட் செல் ஆரம்பித்தாலும்,எத்தனை குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படுகின்றன?
    ஏன் ஐ.டி.நிறுவனங்களுக்கு இந்திய மற்றும் மாநில அரசுகள் ராஜகம்பளம் விரித்து,சலுகைகளை அள்ளிக் கொடுக்கின்றன? வந்தாரை வாழ வைக்கும் ஊரு இது;இங்கேயே வாழ்வோரை சாகடிக்கும் ஊரும் இதுதான் என்பது ஐ.டி துறையிலும் நிஜம்தான். ஒரே ஒரு பன்னாட்டு குளிர்பானநிறுவனம் இந்தியாவுக்கு வந்ததால், சுமாஎ 3000 வட்டார குளிர்பான நிறுவனங்கள் அழிந்தன.அதனால்,எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன.வேலை அல்லது சுய தொழில் செய்ய முடியாவிட்டால் ஒரு குடும்பம் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது மிக தவறு.ஒழுக்கத்தைப் போலவே ஒழுக்கமின்மையும் காலம் காலமாக இருந்து வருகிறது. அண்ணாச்சி, ஆட்டோ சங்கர் எல்லாம் என்ன ஐ. டி ஊழியர்களா ? மற்றும் வேலையில்ல திண்டாட்டத்தை சமாளிக்க வக்கில்லாமால் அரசாங்கம் இருந்த போது இந்த நிறுவனங்கள் தான் பல குடும்பங்களை வறுமையில் இருந்து காப்பாற்றின.. திறமை சாலிகளை முன்னேற்றின..... ஒருவர் தாழ்த்து போவதற்கு மற்றொருவர் காரணமல்ல.

    இன்னும் சொல்லப்போனால் சென்னையில் பணக்காரர்கள் எல்லோரும் சுய- தொழில் செய்பவர்களே... ஐ.டி ஊழியர்கள் அல்ல... தயவு செய்து இந்த புளித்துப் போன குற்றச்சாட்டுகளை சொல்லாதீர்கள்.. நன்றாக பாருங்கள்.. நாடே நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது....

    ReplyDelete
  6. இந்த சோதிடக் கணிப்பைச் செய்தவர் யார் என்று அறியலாமா?

    எந்த விதி அல்லது எந்தக் கோள்களின் சேர்க்கை இந்த நிகழ்வுக்கு காரணமாகும் என்பதை கொஞ்சம் சுருக்கமாகவேனும் கூறினால் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அன்புடையீர் வாழ்க வளமுடன்,நமது ஆன்மீகக் கடலை மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசிக்கவும்.இதுவரை சுமார் 500 தலைப்புக்களில் வலைப்பூக்களை மலரவிட்டுள்ளோம்.அதில் இருக்கும் ஒரு தகவலைத்தான் மீண்டும் சுருக்கமாக விவரித்துள்ளோம்.நன்றி!!!

    ReplyDelete