Monday, August 10, 2015

வர்மக்கலை என்றால் என்ன?



மனித உடலில் குறுக்கும் நெடுக்குமாக நரம்புகள் இருக்கின்றன;இதை மேல்நாட்டு மருத்துவம் கற்றுக் கொடுக்கிறது;இந்த நரம்புகளின் இடையே நாடிகள் இருக்கின்றன;இந்த நாடியும் நரம்பும் இணையும்/குறுக்கிடும் இடமே வர்மப்புள்ளிகள்,வர்ம மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன;கால் மூட்டுக்குக் கிழே ஒரு குறிப்பிட்ட இடத்தை(ஐந்து சதுர மி.மீ பரப்பளவு) அழுத்தினால்,நாம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்போம்;


வர்மக் கலையை பூமிக்கு அறிமுகப்படுத்தியவர்கள் சித்தர்கள்;வர்மக்கலையின் பிரபஞ்ச ஆசான் ஆதிசிவனே!

(அவர் இதற்கு மட்டுமா ஆசான்? தமிழ் மொழி,சித்தமருத்துவம்,ஜோதிடம்,மந்திர ஜபம்,பஞ்சபட்சி சாஸ்திரம்,சரக்கலை என்றழைக்கப்படும் மூச்சுக்கலை;ஜாமக்கோள் ஆருடம்,சில்ப சாஸ்திரம் எனப்படும் கோவில் கட்டும் கலை;ஓகம் எனப்படும் யோகாசனம்;இவை அனைத்தையும் ஆதிசிவனிடம் கற்று பூமியில் பரப்பியவர்கள் சித்தர்களே! தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வம்சாவழியினரே!)


மனித உடலில் 1000 வர்ம மையங்கள் இருக்கின்றன;இதில் முக்கியமானவை 108 ஆகும்;படுவர்மம் 12,தொடுவர்மம் 96,அடக்க வர்மம் 1 என்று மொத்தம் தற்போதைய புழக்கத்தில் 108 வர்மங்கள் இருக்கின்றன;இதில் அண்டவர்மம்,பிண்டவர்மம்,விந்துவர்மம்,தண்டுவர்மம் என்று அதிகமான வர்மங்கள் 152 இருக்கின்றன; முன் கோபத்தையும்,பொறாமையையும் கைவிட்டு,சிவயோகியாக மாறியவர்களூக்கே வர்மக் கலை கற்றுத் தர வேண்டும் என்பது சிவனார் வகுத்த வித்யா(வித்தை) விதி ஆகும்;ஆதாரம்:சூட்சும னான திறவுகோல்;ஸ்ரீஜெகத்குரு நாகானந்த சுவாமிகள்;சதுரகிரி அருகில்;


வர்மக் கலையின் போர்க்கலைக்கு களரி என்று பெயர்;இதன் பூர்வீகம் நமது தமிழ்நாடுதான்;குமரிக்கண்டத்தில் இது மனிதர்களுக்கு முதன் முதலில் போதிக்கப்பட்டது;


வர்மக்கலையின் மருத்துவ சிகிச்சைக்குப் பெயர் நியூரோதெரபி! இதை தற்போது இரண்டு ஆண்டுப் படிப்பாக மும்பையில் சொல்லித் தருகின்றனர்;தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு நியூரோதெரபிஸ்ட் இருக்கிறார்;இது ஒரு மருந்தில்லாத மருத்துவம் ஆகும்;இன்றைய கால கட்டத்தில் எந்த நோயை எல்லாம் அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்திட முடியுமோ,அதை எல்லாம் உணவுக் கட்டுப்பாடு,நியூரோதெரபி சிகிச்சை மூலமாக சில நாட்கள் அல்லது சில வாரங்களிலேயே குணப்படுத்திவிட முடியும்;

அப்படி சிறிய செலவிலேயே பலவிதமான நோய்களைக் குணப்படுத்தப்பட்டு,ஆரோக்கியமாக பல ஆயிரம் பேர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்;உங்கள் பகுதி நியுரோதெரபிஸ்ட் செல் எண்ணைப் பெற அழைக்கவும்;



வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment