Monday, August 10, 2015

பழமொழியும் அதற்குரிய சரியான விளக்கமும்



சேலை கட்டிய பெண்ணை நம்பாதே என்பது பழமொழிகளில் ஒன்று;அப்போ சுடிதார் அணிந்த பெண்ணை நம்பலாமா? என்பது நவீன குதர்க்க சிந்தனையாக வருவது இயல்பு;

சேல் என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு வெட்கம் என்ற அர்த்தம் இருக்கிறது;வெட்கத்தைக் கைவிட்ட பெண்ணை நம்பாதே என்பது அந்தக் காலத்து அனுபவ மொழி;
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே என்ற பழமொழி நாளடைவில் சேலை கட்டிய பெண்ணை நம்பாதே என்று வேகமான வாழ்க்கையில் மருவி விட்டது;

1990க்குப்பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது;1990க்குப்பிறகு பிறந்த 100 பெண்களில் 98 பேர்களுக்கு வெட்கம் உணர்வு ஏற்படுவதில்லை;1980 முதல் 1990 வரை பிறந்த பெண்களில் 100 க்கு 45 பேர்களுக்கும்,1970 முதல் 1980 வரை பிறந்த பெண்களில் 100 க்கு 25 பேர்களுக்கும்,ஆண் தன்மை அதிகமாகவும்,பெண் தன்மை குறைவாகவும் இருக்கிறது;2000 முதல் பிறக்கும் பெண்களில் பெண் தன்மை உள்ளவர்கள் 1000 பெண்களுக்கு 15 பேர்களுக்கே பெண் தன்மை(பெண்ணின் சுபாவங்கள்) இருக்கின்றன;
எனவே.இந்தப் பழமொழி இந்த கணினி காலத்துக்குப் பொருந்தாது;

வெட்கத்தைக் கைவிட்ட பெண்ணை நம்பாதே என்ற பழமொழியைப் பொய்ப்பிக்கும் விதமாக வெட்க உணர்ச்சியே இல்லாத பெண்கள் தான் இன்றைய சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்;வெட்கம் இல்லாத பெண்கள் இக்காலத்தில் ஒழுக்கமாகவும்,எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியசாலிகளாகவும் இருக்கிறார்கள்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment