Wednesday, August 12, 2015

அன்னை அரசாலை(வராகி)யின் அருளைத் தரும் ஆடி வெள்ளி 14.8.15

"அன்னை அரசாலை(வராகி)யின் அருளைத் தரும் ஆடி வெள்ளி 14.8.15

ஆதிசிவனின் அவதாரங்களில் முதன்மையானது பைரவப் பெருமான்;அவர் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று ஆதிசிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதயமானார்;அவருக்கு இணையான பெண்தெய்வத்தை ராஜராஜேஸ்வரி,ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று உருவாக்கினார்;அந்த அன்னைதான் வராகி! வடமொழியில் வாராகி என்று அழைக்கிறார்கள்;

ஆதிசிவன் அல்லது மஹாகாலபைரவப் பெருமான் தன்னை வழிபடுபவர்களுக்கு தக்க நேரத்தில் வரம் தருவது வழக்கம்;அப்படி வரம் தரும் போது சிலசமயம் முழுமையான அளவில் வரம் தராமல் போவதுண்டு;இதை ஒவ்வொருமுறையும் கவனிக்கும் அன்னை அரசாலை,அந்த குறையை உடனே நிவர்த்தி செய்து வரத்தை முழுமைப்படுத்துவது வழக்கம்;

மும்மூர்த்திகள் என்பது பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆவர்;இவர்களின் தலைமைக் கடவுள் மஹாகால பைரவப் பெருமான்;இவரது தலைவர் ஆதிசிவன்;இவரையும் இயக்குவது வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி!

சித்தர்களின் லட்சியமே வாலையை தரிசிப்பதே;இந்த அன்னையே உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என அனைவரையும் அரவணைத்து,பாதுகாத்துச் செல்கிறாள்;இவளை தரிசிக்க விரும்புவோர் முதல் மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவி முழுவதும் ஒரு சித்தரின் சீடராக இருந்திருக்க வேண்டும்;அல்லது தொடர்ந்து மூன்று பிறவிகளுக்கு சிவனை மட்டும் வழிபட்டிருக்க வேண்டும்;

அதன் பிறகு,பிறக்கும் பிறவியில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஒரு நாள் விடாமல் பைரவ வழிபாடு செய்திருக்க வேண்டும்;அதிகபட்சமாக குருவின் தீட்சை கிடைத்து,அதன் பிறகு பைரவ உபாசனை செய்திருக்க வேண்டும்;அதன் பிறகே அன்னை அரசாலை வழிபாட்டிற்கு வர முடியும்;

நாம் வாழ்ந்து வரும் இந்தக் கலியுகத்தில்,பூமியில் உருவான முதல் மொழியான தமிழைப் பேசிக்கொண்டிருக்கிறோம்;சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறோம்;நம்மில் பெரும்பாலானவர்கள் முற்பிறவிகளிலேயே அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டவர்கள் தான்;அதனால் அவர்களுக்கு இந்தப் பதிவு கண்ணில் பட்டிருக்கிறது;

நமது அரசியல்தலைகள் போலியான வாக்குறுதிகளை அள்ளிவீசி,பதவிக்கு வருவதற்குக் காரணம் என்ன? இன்றும் யாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு நினைக்காத மனிதர்கள் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்;குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள்;அவர்கள் அனைவருமே அன்னை அரசாலையின் அன்புக் குழந்தைகளே!அன்னை அரசாலையின் தரிசனத்தைப் பெற முறைப்படி உபாசனை செய்ய வேண்டும்;அந்த உபாசனைகளின் நிறைவாக அன்னை அரசாலை(வராகி)யின் தரிசனம் கிட்டும்;அன்னை அரசாலையின் தரிசனம் கிட்டியப் பின்னரே வாலையின் தரிசனத்திற்கு முயற்சிக்க வேண்டும்;

அன்னை அரசாலை(வராகி)யின் தரிசனம் இப்பிறவியில் கிட்டிவிட்டால் இந்த கர்மபூமியில் மீண்டும் ஒரு போதும் பிறக்க மாட்டோம்;(ஆனால்,நாம் விரும்பினால் அன்னையின் ஆசியோடு குறிப்பிட்ட ஆன்மீக லட்சியங்களை நிறைவேற்றிட பிறப்பதும் உண்டு)இந்த ஜன்மாந்திர (பல ஜன்மங்களாக தொடர்ந்து செய்யப்படும் ஒரு குறிபிட்ட ஆன்மீக பெருமுயற்சி)க்கு ஸ்ரீவித்யா உபாசனை என்றும் ஒரு பெயர் உண்டு;

அன்னை அரசாலையைச் சரணடைய முறைப்படி ஆரம்பிப்பது அவசியம்;நாள் செய்வதை நல்லவன் கூட செய்யமாட்டான்;என்ற ஜோதிடப் பழமொழிக்கு ஏற்ப அன்னை அரசாலை(வராகி)யை வழிபடத் துவங்கிட ஏற்ற மிகச் சிறந்த நாள்:எதிர்வரும் ஆடி அமாவாசை 14.8.2015 வெள்ளிக்கிழமை ஆகும்;

ஆக்ரோஷமான அல்லது வீரம் நிறைந்த பெண் தெய்வங்கள் வரங்களை அள்ளித் தருவது ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில் தான்;வரும் 17.8.15 திங்கட்கிழமையோடு இந்த மன்மத வருடத்தின் ஆடி மாதம் நிறைவடைகிறது;எனவே,ஆடி மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று ஆடி அமாவாசை இந்த வருடத்தில் இயல்பாகவே அமைந்திருக்கிறது;

எப்படி வழிபாடு ஆரம்பிப்பது?

14.8.15 வெள்ளிக்கிழமை காலை 11.30 முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பின்வரும் ஆலயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும்;

அருகில் இருக்கும் சிவாலயத்தில் அன்னையின் சன்னதி முன்பாக கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளலாம்;

அல்லது ஏதாவது ஒரு உக்கிரமான பெண் தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று அன்னையின் சன்னதியில் அல்லது சப்தகன்னியரின் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொள்ளலாம்;

அல்லது வராகி அன்னையின் ஆலயத்தில் (உத்திரகோசமங்கை,தஞ்சை பெரியகோவில்,அரக்கோணம் அருகில் இருக்கும் பள்ளூர்) அமர்ந்து கொள்ளலாம்;

ஓம் அருணாச்சலாய நமஹ (ஒருமுறை)
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ(ஒருமுறை)
ஒம் கணபதி நமஹ(ஒருமுறை)
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா 
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி 
போத்ரிணி
சிவா
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்நாசக்ரேஸ்வரி
அரிக்நி
என்ற அன்னையின் 12 பெயர்களை 15 நிமிடம் வரை  ஜபித்தால் போதுமானது;

வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!"

சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்நாசக்ரேஸ்வரி
அரிக்நி

என்ற அன்னையின் 12 பெயர்களை 15 நிமிடம் வரை ஜபித்தால் போதுமானது;

வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment