Saturday, October 20, 2012

சரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை!!!





மனித இனம் நாகரீகமடையத்துவங்கி சுமாராக 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன.அப்போதுதான் இராமாயணம் நமது நாட்டில் நிகழ்ந்தது.பாதி மனிதனாகவும்,பாதி குரங்காகவும் இருந்த கால கட்டம் அது.அப்போது இருந்த தேசமே கிஷ்கிந்தை ஆகும்.மனிதன் பாதி,குரங்கு பாதி என்ற நிலையில் இருந்த சூழ்நிலையில் தோன்றிய சிறந்த பக்தனே ஆஞ்சநேயர் எனப்படும் மாருதி ஆவர்.அவரைப்போல இன்னொரு ஆத்மா பிறக்க இன்னும் பல லட்சம் வருடங்கள் இந்த பூமி காத்திருக்க வேண்டும்.

சரணாகதி தத்துவத்துக்கு நமக்கு சிறந்த குருவாக இருப்பவர் ஆஞ்சநேயரே! நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்,நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனைக்கும் நாமே காரணம் என்று நம்புகிறோம்.இந்த எண்ணமே நமக்குள்ளிருக்கும் நான் என்ற எண்ணத்துக்கு உயிரூட்டி நம்மை வழிநடத்தத் துவங்குகிறது.இதனால்,என்னால் தான் . . . என்ற எண்ணங்கள் நம்மை ஆட்சி புரியத் துவங்குகிறது.கூடவே,நாம் இன்று கற்று வரும் மெக்காலே கல்வித்திட்டமும் நமது ‘நான்’ என்ற அகங்காரத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றிவருகிறது.இப்படிப்பட்ட அகங்காரம் கொண்ட மனிதர்களால் நமது அரசுத்துறைகளும் அரசு ஊழியர்களால் நிரம்புகிறது.இதனால் தான் மனித நேயம் என்பது அரசு அலுவலகங்களிலும் அரசியலிலும்,ஆட்சியில் தேடிப்பார்த்தாலும் கிடைப்பதில்லை;

இந்த சூழ்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நினைக்கிறோம்;நாம் செய்யும் ஒவ்வொரு சாதனையையும் நாம் தான் சாதிக்கிறோம் என்று நம்புகிறோம்;இந்த நம்பிக்கையானது நமக்கு நான் என்ற அகங்காரத்தை வளர்க்கிறது.இந்த அகங்காரத்தினால் நாம் ஆரம்பத்தில் சந்தோஷப்படுகிறோம்;போகப்போக என்னால் தான் இந்த உலகமே இயங்குகிறது என்று செயல்படுகிறோம்;கூடவே,நமது ஜாதகப்படி இருக்கும் யோகங்களும் நம்மை வாழ்க்கையில் பெரும் செல்வச் செழிப்புக்குக்  கொண்டு செல்ல ஆடாத ஆட்டம் ஆடிவிடுகிறோம்.கெட்ட நேரமான ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,ஆறாம் இடத்து திசை,எட்டாமிடத்து திசை,பாதகாதிபதி திசை இவைகளில் ஏதாவது ஒன்று நம்மை நெருங்கியதும்,நமது அத்தனை புகழும்,அனைத்து செல்வாக்கும் தூள் தூளாகிவிடுகின்றன.அப்போதுதான் நாம் சாதாரண ஆள் என்பது தெரியத் துவங்குகிறது.அப்போதுதான் நாம் உச்சத்தில் இருக்கும் போது நமக்கு அறிவுரை சொன்னவர்களை நினைத்தும்,அவர்கள் கெஞ்சி கெஞ்சி சொன்ன புத்திமதிகளையும் நினைத்துப்பார்க்கிறோம்.


இப்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்குப்பதிலாக, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும்,நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் நாம் வழிபடும் ஸ்ரீபைரவரின் அருளால் என்று எண்ணத் துவங்க வேண்டும்;ஒரு சாதனையை நாம் செய்ததுமே நமது மனதுக்குள் ஒருவித உணர்வு தோன்றும். “நாம் தான் இந்த சாதனையைச் செய்தோமா?” என்று தோன்றும்.அப்போது, நமது மனதின் சைத்தான் பகுதி ‘நீ அப்பேர்ப்பட்ட சாதனையாளன்’ என்று அகங்காரம் என்ற திமிரைத் தூண்டிவிடும். இந்த கணத்தில்(கண நேரமான சில நொடிகளில்) இந்த சாதனைக்கு நாம் வழிபடும் ஸ்ரீபைரவரே காரணம் என்றோ அல்லது நாம் தினமும் செய்யும்  ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் என்றோ எண்ணத் துவங்க வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு சாதனையைச் செய்து முடிக்கும்போதும் நினைக்கப்பழகினால், நம்மை பாவம் அண்டாது.இந்த உணர்வைத்தான் சுவாமி விவேகானந்தர் கர்ம யோகம் என்று கூறுகிறார். “கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே” என்று சுருக்கமாக கர்மயோகத்தின்  மையப்புள்ளியை விவரிக்கிறார்.

ஒவ்வொரு கடமையையும் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு;அந்த  கடமையின் பலன்களை அனுபவிக்க காத்திருக்க வேண்டாம்;அப்படிக்காத்திருந்தாலே நமக்குள் நான் என்ற அகங்காரம் வரத் துவங்கிவிடும்;ஏனெனில்,நான் தானே இந்த வேலையை முடித்தேன்;இருந்தும் ஏன் இதற்கான பலன் நம்மை வந்து சேரவில்லை;எனவே,நாம் நமது அருகில் இருக்கும் வேலைகளை(அடுத்து செய்ய வேண்டிய பணிகளை) செய்து கொண்டே செல்வோம்;இதுவே கர்மயோகத்தின் அடிப்படை ஆதாரம்.இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் நமது ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர,நமது வாழ்க்கைப்பாதையில் ஒரு மலர்ச்சியான அர்த்தம் தோன்றிவிடும்.


ஓம்சிவசிவஓம்


No comments:

Post a Comment