Sunday, October 28, 2012

ஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!





அசுபதி நட்சத்திரம் வரும் நாளில் ரவி என்ற சூரியனும்,மதி என்ற சந்திரனும் 180 டிகிரியில் நிற்கும் நாளே ஐப்பசி மாதத்துபவுர்ணமி ஆகும்.ரவி துலாம் ராசியிலும்,மதி மேஷராசியிலும் நிற்கும் போது ஆத்மக் காரகனாகிய ரவியும்,மனக் காரகனாகிய மதியும் முழு பலம் பெறுகிறார்கள்.நமது பிறந்த ஜாதகப்படி,நமது ஆத்மாக்காரகன் நமது லக்னாதிபதியாக இருந்தாலும்,அந்த லக்னாதிபதிக்கு ஆத்ம பலத்தை வழங்குவது ரவி என்ற சூரியனே! நமது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடத்து கிரகமே நமது மனோபலத்தை(பூர்வ புண்ணியத்தால்) வழங்குகிறது;அந்த ஐந்தாமிடத்து அதிபதிக்கு மனசக்தியை வழங்குவது மதி என்ற சந்திரனே! எனவே,ரவியும்,மதியும் பலம் பெறுவது ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாளன்றுதான்!!!


ரவி என்ற சூரியனே நவக்கிரகங்களுக்கும் ஆத்ம சக்தியை ஒவ்வொரு நொடியும் அளித்து வருகிறார்.அதனால் தான் அவருக்கு ஆத்மாக் காரகன் என்று நாம் (ஜோதிடப்படி) அழைக்கிறோம்.ஆனால்,அந்த ஆத்மாக் காரகனுக்கே ஆத்ம சக்தியை வழங்குவது (ப்ராணதேவதையாக இருப்பவர்) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவர் ஆவார்.


இந்த ஐப்பசி மாதத்து பவுர்ணமியானது 28.10.12 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.04க்குத் துவங்கி,மறுநாள் 29.10.12 திங்கட்கிழமை நள்ளிரவு 1.32 வரை இருக்கிறது.ஆக,பலருக்கு எந்த நாள் பவுர்ணமி என்று குழப்பம் வருவதுண்டு;இரண்டு நாட்களிலும் பவுர்ணமியைக்கொண்டாடலாம்.


இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நேரங்கள் வருமாறு:29.10.12 திங்கட்கிழமை  காலை 8 முதல் 9 மணி வரை;மதியம் 3 முதல் 4 மணி வரை;இரவு 10 முதல் 12 மணி வரை;இதில் இரவு நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது மிகவும் நன்று.


ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை பல்வேறு காரணங்களால் இடையில் ஜபிக்க முடியாமல் கைவிட்டவர்கள்,இந்த நாளில் ஜபிக்கத் துவங்கலாம்;


புதிதாக ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புபவர்கள் இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.


அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியத்தைத் தரும்;பலவிதமான பிரச்னைகளை இவ்வாறு அன்னதானம் செய்த ஓரிரு நாட்களிலேயே தீர்த்துவைத்துவிடும்.பழமையான சிவாலயங்களிலோ அல்லது பவுர்ணமி பூஜை நடைபெறும் அம்மன்கோவில்களிலோ அன்னதானம் செய்வது நன்று.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment