Saturday, October 20, 2012

உலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது?




காலையில் கண்ணைக் கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒரு காபியை சிபாரிசு செய்கிறார்கள்;

மட்டமத்தியானம் டி.வி.யைப் போட்டால் ‘மேனேஜர்’ கிருஷ்ண மூர்த்தி,டெல்லி கணேஷ், ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ திவ்யதர்ஷினியெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்று கொண்டு ப்ளாட் வாங்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்.

சாயங்காலமாக புதுப்படம் போடுகிற சாக்கில்,10 நிமிஷத்துக்கு ஒருதடவை மூன்று விஜய் மொபைலில் பேசி,சரத்குமார் வேட்டி கட்டி நடந்து,தனுஷீம் விமலும் ஹேர் ஆயில் தடவி,அஞ்சலியும் தமன்னாவும் குத்து டான்ஸ் ஆடி,    ‘ஏண்டா வூட்ல இருக்கீங்க? ஷாப்பிங் போங்கடா’என வேப்பிலை அடிக்கிறார்கள்.(பழமொழியை மாத்துங்கப்பா! கோக் அடிக்கிறார்கள்)
நடுநடுவே ‘புரட்சிப் போராட்டம்’ என பிரபு நகைக்கடைக்குப்பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா,பகத்சிங்குக்கு எல்லாம் டவுசர் கிழிகிறது.

ஊரே தூங்குகிற மிட்நைட்டில் பார்த்தால் தாடை வீங்கிய சஃபாரி பார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துக் கொண்டு இருக்கிறார்.
இன்னொரு சேனலில் ஒரு கொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் ‘இதாங்க அமுக்ரா லேகியம். . .’ என கடுப்படிக்கிறார்கள்.
பின்னிரவுக்குப்பின்னும் ஒரு வெள்ளைக்காரிக்கு சிந்தாதிரிப்பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு வீட்டுப்பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தொப்பையை குறைக்க டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உச்சகட்டமாக சிட்டி முழுக்க ‘சினேகா பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம். . .?’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
நன்றி: நமது நலனிலும்,நாட்டு நலனிலும்,தமிழர்களின் நலனிலும் அக்கறையாக இருக்கும் ஆனந்த விகடன்,பக்கம் 56,வெளியீடு1.8.12

நீங்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்:மனோதத்துவம் சொல்லுவது என்னவெனில்,நமது ஐம்புலன்களான கண்,காது,மூக்கு,சுவை,தொடு உணர்வு இவைகளில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்.இவை இரண்டையும் கட்டுப்படுத்திட தெரிந்து கொண்டால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்;
அதே சமயம் இந்த இரண்டையும் குறி வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களே திரைப்படமும்,டிவியும்.நம்மை அடிமுட்டாளாக்குவதில் எப்படி வெற்றி பெற்று,கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.
ஒரு கோடி சம்பளம் வாங்கும் கார்த்தி,ஒரு காபியையா வாங்கும்படி நம்மை நச்சரிப்பது?
சொந்த ஊரில் நிலம் வாங்கினாலே அதில் ஏமாறாமல் வாங்கிட நமக்கு ஆயிரம் சாணக்கியத்தனம் தேவைப்படுகிறது.இதில் செங்கல் பட்டில் வாங்கி,(விவேக் நடித்த செங்கல்பட்டு,செங்கல்பட்டு காமெடி நினைவுக்கு வருகிறதா?)
ஏன் ஒரு விஜய் விளம்பரத்தில் நடித்தால் செல்போன் வாங்க மாட்டோமா? எதற்கு மூன்று விஜய்? நம்மை நாகரீகக்கோமாளியாக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்றோ?

கேரளாவில் கம்யூனிஸ ஆட்சிகளே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன;நகைக்கடை வைத்திருப்பவர் அங்கே போய் புரட்சிப் போராட்டம் என்று விளம்பரப்படுத்த வேண்டியது தானே? ஓ! கேரளாவில் புரட்சி செய்து முடிச்சாச்சு;அது சரி,புரட்சிக்கும் தங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெண்களின் உடல்வாகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமைந்திருக்கும்;அதை ஓரளவுக்கு மேல் மாற்றிடவே முடியாது;ஆனாலும்,அமெரிக்கத் தயாரிப்புகள் நமது தலையில் மிளகாய் இல்லை;இல்லை;சில்லி அரைத்துக்கொண்டு,இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.நாம் இன்னுமா ஏமாறுவது?

சினேகா பிரசன்னா கல்யாணச் செய்தியே நமக்குத் தேவையில்லாத விஷயம்.


1 comment:

  1. விநாயகர் சதுர்த்திக்கு அடிக்கப்பட்ட பேனர் மிக மிக அருமை............

    ஏன் தான் எங்கள் நாங்கள் சிறுவயதில் இருந்து உயிருக்கும் மேலாக ஆசைப்பட்டு கற்ற தொழிலை இப்படி கேவல படுத்துகிறார்களோ......

    ReplyDelete