Friday, October 19, 2012

இடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர்








மதுரைக்கு அருகில் இருக்கும் கிராமம் இடைக்காட்டூர் ஆகும்.இங்கே சித்தர் இடைக்காடர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிறந்தார்.புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று பிறந்தார்.இவர் திரு அண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளே இருக்கும் கோசாலையை ஒட்டிய ஒரு இடத்தில் ஜீவசமாதியாகி இருக்கிறார்.
7.10.12 ஞாயிற்றுக்கிழமை அன்று இடைக்காட்டூரில் இடைக்காடர் சித்தரின் குருபூஜை விழாவும்,அன்னதானமும் நடைபெற்றது.அதில் நமது வாசகர்கள் கலந்து கொண்டனர்.அதன் படங்களை இங்கே வெளியிட்டிருக்கிறோம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் இடைக்காட்டூருக்கு ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் வருகை தந்து ஜீவ சமாதி வழிபாடு(மஞ்சள் நோட்டீஸில் குறிப்பிட்ட படி) எட்டு திருவாதிரை நாட்களுக்கு வழிபாடு செய்யலாம்.

விரைவாக பிரச்னைகள் தீர விரும்புவோர் சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள்(நோட்டீஸில் 7 மணி என்று தவறாக குறிப்பிட்டுவிட்டோம்)ஜீவசமாதி வழிபாட்டுக்குரிய பொருட்களுடன் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகள்மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.உங்களது பிரச்னைகள் விரைவாக தீர வேண்டுமெனில்,நீங்கள் செய்ய வேண்டியது:அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;இந்த வழிபாடு பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது;முறையற்ற உறவினைக் கைவிட வேண்டும்.நேர்மையான வழியில் சம்பாதிக்கப்  பழக வேண்டும்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment