Monday, October 29, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்!!!




.விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில் அமைந்திருப்பது முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டித் தெரு.இந்த தெருவின் மையத்தில் நெசவாளர்களின் குடியிருப்புகள் புடைசூழ அமைந்திருக்கும் கோவிலே அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியன்று ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் கரண்டியே இல்லாமல் கையாலேயே அப்பங்களைச் சுடுவார்;அப்படிச் சுட்டு அவைகளை பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு,பிறகு அங்கே வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக விநியோகம் செய்வார்கள்.இது காலங்காலமாக நடைபெறும் ஒரு அதிசய நிகழ்வு ஆகும்.சுமார் 2000 குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கும் பத்திரகாளியம்மனை மாதம் ஒரு பவுர்ணமி வீதம் 12 பவுர்ணமிகளுக்கு தொடர்ந்து வழிபட்டு வந்தால்,நமது கடுமையான சிக்கல்களும்,கஷ்டங்களும் விலகும் என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை ஆகும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பூஜை இரவு 10 மணிக்குத் துவங்கி 12 மணிக்கு நிறைவடைகிறது;பிறகு ஒரு மணி நேரத்துக்கு அன்னதானம் நடைபெற்றுவருகிறது.பூசாரியிடம் செல்லில் கேட்டுவிட்டு நீங்களும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம்.கோவிலில் தங்கும் வசதி மட்டும் இருக்கிறது.


ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி சாலையில் ஒரு கி.மீ.தூரத்தில்  ஊருக்குள்ளேயே கோவில் அமைந்திருக்கிறது.பூசாரி சுந்தரமகாலிங்கத்தின் செல் எண்:9003353286.நேற்றுமுன் தினம் இரவு நேர பூஜையைக் காண இங்கே சொடுக்கவும்.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment