Thursday, September 10, 2015

ஸ்பைருலினாவும்,அதில் தயாராகும் மாத்திரைகளும்


400 ஆண்டுகளுக்கு முன்பு,பிரான்ஸ் நாட்டினர் கிழக்கு ஆப்ரிகாவில் அமைந்திருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருந்தனர்;அப்போது விஷ காய்ச்சல் பரவி பல கிராமங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது;ஆனால்,ஒரு ஏரியைச் சுற்றிலும் இருந்த சில கிராமங்களில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை;

இதை கவனித்த அவர்கள்,அந்த கிராம மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தனர்;அவர்கள் அனைவரும் அந்த ஏரித்தண்ணீரை அருந்தவும்,சமைக்கவும் பயன்படுத்தியதால்,அவர்களை விஷ காய்ச்சல் தாக்கவில்லை;அந்த ஏரியை ஆராய்ந்த போது ஸ்பைருலினா கண்டுபிடிக்கப்பட்டது;

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஸ்பைருலினா விற்பனை பரவலாகிவருகிறது;எம்.எல்.எம்மில் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள்;மாவட்டத்திற்கு ஒரு ஸ்பைருலினா தயாரிப்பாளர்கள் உருவாகி வருகின்றனர்;இதனால் 100 மாத்திரைகள் கொண்ட டப்பா ரூ.200 முதல் ரூ.300க்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது;

நமது உடலில் என்னென்ன சத்துக்கள் எந்த இடங்களில் குறைவாக இருக்கிறதோ,அவைகளை ஒரே சமயத்தில் நிவர்த்தி செய்து முழு ஆரோக்கியத்தைத் தருகிறது ஸ்பைருலினா என்ற சுருள்வடிவ பச்சைப்பாசி!

ஆனால்,மாவட்டம் தோறும் உற்பத்தியாளர்கள் உருவானதும்,இதிலும் தங்களது வர்த்தக நோக்கை திணிக்கத் துவங்கிவிட்டனர்;ஆமாம்!

உண்மையான ஸ்பைருலினா பொடியானது அழுகிய முட்டைவாடையில் இருக்கும்;நமது தமிழ்நாட்டு ஸ்பைருலினா உற்பத்தியாளர்கள் ஸ்பைருலினாவுடன் வேப்பிலைப்பொடி அல்லது நெல்லிக்காய் பொடியைக் கலந்து விற்பனைச் செய்துவருகிறார்கள்;ஸ்டிக்கரில் ஒரு சதவீதம் குறிப்பிடுவது போல கலப்பது இல்லை;ஸ்பைருலினா 80%;நெல்லிப்பொடி 20% என்று அச்சடித்திருப்பர்;ஆனால்,நெல்லிப்பொடி 80%;ஸ்பைருலினா 20% என்றுதான் கலந்து கட்டி 400% முதல் 800% லாபம் பார்க்கிறார்கள்;லாபம் இவர்களுக்கு;கெட்டப் பெயர் ஸ்பைருலினாவுக்கு!

விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கிப் பணிபுரிபவர்களுக்கு நாசா உணவாக பரிந்துரைப்பது இந்த ஸ்பைருலினாவைத்தான்!

வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் நாம்,பெரும்பாலும் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை;இது 40 வயதுக்குப் பிறகு ஸ்ட் ரோக்கை உருவாக்கும்;இதைச் சரி செய்ய ஒருவேளை உணவாக 4 ஸ்பைருலினா மாத்திரைகளைச் சாப்பிடாலே போதுமானது;

மேலே கூறியபடி வேப்பிலைப்பொடியோ நெல்லிப்பொடியோ கலந்திருந்தாலும் அதனால் எந்தப் பக்கவிளைவும் வராது;ஸ்பைருலினாவின் முழு மருத்துவகுணம் நமக்குக் கிடைக்காமல்,வேப்பிலைப்பொடியின் மருத்துவகுணமும்,நெல்லிப்பொடியின் மருத்துவகுணமும் கிடைக்கும்;அவ்வளவுதான்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment