Wednesday, September 9, 2015

நர்மதா பரிக்ரமா என்றால் என்ன?


நர்மதை நதியின் பிறப்பிடத்தில் இருந்து,அது கடலில் கடக்கும் இடம் வரை நடந்தே சென்று,மீண்டும் அடுத்த கரைவழியாக நர்மதா நதியின் பிறப்பிடத்திற்குத் திரும்புவதே நர்மதா பரிக்ரமா என்று பெயர்;நர்மதா நதியின் நீளம் 1300 கி.மீ.கள்;இருகரைகளையும் சேர்த்து 2600 கி.மீ.தூரத்தைக் கடக்க சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்;தென் கரையில் துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை பயணித்து,மீண்டும் வடகரை வழியாக நர்மதை நதி பிறக்கும் இடத்திற்கு வரவேண்டும்;

நர்மதா பரிக்ரமாவை முதன் முதலில் துவக்கியவர் ஸ்ரீமார்க்கண்டேய முனிவர்;அதன் பிறகு ஏராளமான ரிஷிகள்,துறவிகள்,சாதுக்கள்,சிவபக்தர்கள் பயணித்துள்ளனர்;

நர்மதா நதியின் உற்பத்திஸ்தானம் மத்தியப் பிரதேசம்,அமர்கண்டக்கில் துவங்கி,கடலில் கலக்கும் இடம் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் விமலேஷ்வர் வரை வந்து மீண்டும் வடக்குக் கரை வழியாகப்பயணிக்க வேண்டும்;

இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மிஷன்,சென்னை பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது;விவேகானந்த கேந்திரத்தில் கல்வித்தொண்டு ஆற்றிய ஒருவர் தனது நர்மதாபரிக்ரமாவின் அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்;புத்தகத்தின் பெயர்: நர்மதை நதி வலம்;

1.இந்த தூரங்கள் முழுவதும் காலணி அணியக் கூடாது;

2.பணம் வைத்துக் கொள்ளக் கூடாது;

3.இந்தப் பயணம் முழுவதும் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும்;ஒருவேளைக்கு மூன்று பேர்களிடம் மட்டுமே பிச்சை கேட்க வேண்டும்;அந்த மூன்றுபேர்களில் எவரும் உணவு தராவிட்டால்,அடுத்த வேளை வரை எதுவும் சாப்பிடக்கூடாது;

4.இந்தப் பயணம் முழுவதும் முகச்சவரம் செய்யக் கூடாது;கோபப்படக்கூடாது;முடிவெட்டிக் கொள்ளக் கூடாது;

5.பாய்,துணியில் மட்டும் படுத்துத் தூங்கலாம்;பிரம்மச்சாரியம் காக்க வேண்டும்;அசைவம் ஒருபோதும் சாப்பிடக்கூடாது;

6.நர்மதா நதியின் பிறப்பிடத்தில் ஒரு பாட்டிலில் நீர் எடுத்துக் கொண்டு,அதைப்பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும்;நர்மதா நதி கடலில் கடக்கும் இடத்தில் அந்த பாட்டிலில் இருக்கும் நீரைக் கொஞ்சம் கடலில் கலந்துவிட்டு,பதிலுக்கு கடல் நீரை அதில் நிரப்ப வேண்டும்;நிரப்பி வடக்கு கரைவழியாக மீண்டும் நர்மதா நதி பிறக்கும் இடத்தை வந்தடையவேண்டும்;பிறகு,அந்த பாட்டில் நீரைக் கொண்டு ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று ஓம்காரேஸ்வரை அபிஷேகம் செய்ய வேண்டும்;

7.ஓம்காரேஸ்வரர் ஆலயம் நர்மதா நதி ஒடும் வழியில் ஒரு தீவுக்குள் இருக்கிறது;தென் கரை வழியாகப் புறப்பட்டு,வடகரை வழியாக மீண்டும் நர்மதா நதி பிறப்பிடத்துக்கு வர வேண்டும்;எனவே,பரிக்ரமாவின் போது இந்த ஆலயத்திற்குப்போகக் கூடாது;

8.இந்த பரிக்ரமாவை முற்காலத்தில் 3 ஆண்டுகள்,3 மாதங்கள்,12 நாட்கள் வரை தொடர்ந்து செய்து முடித்தனர்;


9.நர்மதா நதியில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லுமே பாணலிங்கங்கள்;அரிசி போலவே இருக்கும்;இவைகளே பூமியில் புனிதமான சுயம்பு லிங்கங்கள்;


எனவே நர்மதாபரிக்ரமா பயணத்தின் போது ஓம் நமசிவாய என்றோ அல்லது ஓம் வராகி சிவசக்தி ஒம் என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தவாறு பயணிக்க வேண்டும்;

No comments:

Post a Comment