Saturday, December 1, 2012

தன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் வழிபாடு!!!




கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;வேதம் அறிந்தவர்கள் வாழும் ஊர் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.இங்கே கி.பி.முதலாம் நூற்றாண்டில் ஸ்ரீமஹாவிஷ்ணுவையே தனது மணாளனாக நினைத்து வாழ்ந்த தெய்வீக கன்னி ஸ்ரீநாச்சியார் அம்மன் என்ற ஆண்டாள் ஆவார்.இவரது தெய்வீகக் காதலை உணர்வதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலிருக்கும் திருவண்ணான்மலைக்கு வந்து காட்சியளித்தவர் திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள்.இங்கே இவர் ஸ்ரீனிவாசப் பெருமாளாகக்காட்சியளித்து வருகிறார்.
இவரது அருளைப்பெறுவதற்கு நமது ஆன்மீக குரு  ஒரு அரிய அதே சமயம் அற்புதமான வழிபாட்டு ரகசியத்தை தங்களுக்கு  வெளிப்படுத்தியிருக்கிறார்.பிங்க் அல்லது பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு பின்வரும் பொருட்களோடு இந்த திருவண்ணான்மலை அடிவாரத்திற்கு வந்துவிட வேண்டும்.

வீட்டிலேயே சமைக்கப்பட்ட பால்பாயாசம்,புளியோதரை,ஒன்பது மாதுளம்பழங்கள்(ஒன்பதின் மடங்குகளிலும் கொண்டுவரலாம்),ஒரு கிலோவுக்கும் குறையாமல் வாங்கப்பட்ட டயமண்டுகல்கண்டு,துளசி மாலை ,ஒரு ரூபாய் நாணயங்கள் நூற்று ஐம்பது,தட்சிணை ரூ.60/-,ரோஜா மாலை

11.12.12 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு திருவண்ணான்மலைக்கு வந்து,இங்கே இருக்கும் கோனேரி தீர்த்தத்தின் வாசலில் குடிகொண்டிருக்கும் விநாயகரை முதலில் தரிசித்து ,தேங்காய் உடைத்து,அருகம்புல் மாலை வாங்கி அணிவிக்க வேண்டும்.பிறகு,திருவண்ணான்மலையைச் சுற்றி வர வேண்டும்.அவ்வாறு சுற்றி வரும்போது மேற்கூறியப் பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்ல வேண்டும்.மலையைச் சுற்றி முடிக்க சுமார் 90 நிமிடங்கள் ஆகும்;பிறகு,திருவண்ணான் மலை மீது ஏறி ஸ்ரீனிவாசப்பெருமாளை தரிசிக்க வேண்டும்.அப்போது துளசி மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து,ஒரு ரூபாய் நாணயங்களையும் கொடுத்து சொர்ணாபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;அவ்வாறு சொர்ணாபிஷேகம் செய்யும் போது,ஸ்ரீனிவாசப் பெருமாளின் பாதத்தில் பால் பாயாசம்,புளியோதரை,மாதுளம்பழம்,டயமண்டு கல்கண்டு போன்றவைகளை வைக்க வேண்டும்.அபிஷேகம் முடிந்தப் பின்னர்,நமது குடும்பத்தாரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சகர் தட்சிணையாக ரூ.60/-த்தர வேண்டும்.பிறகு,மலையின் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கும் அலர்மேலு மங்கைக்கு ரோஜா மாலையை அர்ப்பணிக்க வேண்டும்.படையல்களை நமது வீட்டுக்கு கொண்டு வந்து நமது ரத்த உறவுகள் மற்றும் நட்பு வட்டத்துக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்,அவ்வாறு பகிர்ந்து அளிக்கும்போது ஒவ்வொருக்கும் சொர்ணாபிஷேகம் செய்த நாணயம் ஒன்றை வழங்க வேண்டும்.மீதி பத்து ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீட்டு பணப்பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தன ஆகர்ஷணம் மூன்று வாரம் முதல் மூன்று மாதங்களுக்குள் நம்மை வந்து சேரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை;


ஓம்ஹரிஹரிஓம்
ஓம்ஹரிஹரிஓம்
ஓம்ஹரிஹரிஓம்

No comments:

Post a Comment