Sunday, December 2, 2012

ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர்களுக்கு ஒரு இலவச புத்தகம்




ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர்கள் பின்வரும் விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.அப்படிப் பின்பற்றியப் பின்னரே,தினசரி தியானம் அல்லது தவம் அல்லது மந்திரஜபம் செய்ய வேண்டும்.இவ்வாறு  குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் வரையிலும் பின்பற்றி வர அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் உறுதியாகிவிடும்.

முதல் விதி:அசைவம் சாப்பிடக் கூடாது.

இரண்டாம் விதி: மது,சிகரெட்,போதைப் பொருட்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

மூன்றாம் விதி:ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற இந்து தர்மக் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.

நான்காம் விதி:பிறரை மனதால்,உடலால் ஒருபோதும் புண்படுத்தக் கூடாது.

ஐந்தாம் விதி:தினமும் அல்லது வாரம் ஒருநாள் வீதம் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.அயல்நாடுகளில் இருப்பவர்கள் தியானம்/ஜபம் செய்ய ஆரம்பிக்கும்போது மானசீகமாக இவ்வாறு அவர்களுக்கு அறிமுகமான கோவிலுக்கு பயணிக்க வேண்டும்.

ஆறாம் விதி:முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

ஏழாம் விதி: மாதம் ஒருநாள் அன்னதானம் செய்ய வேண்டும்.அன்னதானம் செய்ய ஏற்ற முதல் நாள்:அமாவாசை;இரண்டாம் நாள்:அவரவர் ஜன்ம நட்சத்திரம் மூன்றாம் நாள்:பவுர்ணமி நான்காம் நாள்;இன்று!!!


எட்டாம் விதி: நாம் செய்யும் ஆன்மீக முயற்சிகளைப்பற்றியோ,அவைகளில் நமக்குக் கிடைத்த சாதனைகளைப் பற்றியோ வெளியே தம்பட்டம் அடிக்காமல் இருக்க வேண்டும்;நீங்கள் ஒரு ஜோதிடராகவோ.ஆன்மீக குருவாக இருந்தால் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்யலாம்;சொல்லிக் கொடுக்கலாம்;
இவைகளைப்பின்பற்றுவதோடு,இந்த இணைப்பை  பதிவிறக்கம் செய்து கொள்ளவும்;பின்பற்றவும்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment