Wednesday, December 19, 2012

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும் பிரபஞ்சமும் நமது பூமியும்!!!





பல கோடி ஆண்டுகளாக பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது;சூரியன் நமது காலக்ஸியான பால்வழிமண்டலம் எனப்படும் மில்கிவேயை(Milky Way)ச் சுற்றி வருகிறது;பால்வழிமண்டலம் கன்னிராசி மண்டலத்தைச் சுற்றிவருகிறது;இதுவரையிலும் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள்:

உலகின் மிக பிரம்மாண்டமான விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சி அமைப்பான நாசா அமெரிக்காவுக்குச் சொந்தமானது;அமெரிக்க ராணுவத்தை விட வலிமையும்,சக்தியும்,செல்வ வளமும் கொண்டது;இங்கே ஏராளமான விஞ்ஞானிகள் இருபத்துநான்கு மணி நேரமும் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்;இவர்களின் ஆராய்ச்சியால் தான் நாம் வாழ்ந்து வரும் சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை நாம் கண்டறியமுடிந்தது;(இவர்கள் விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்த உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களாகிய ஆர்ய பட்டர்,பாஸ்கராச்சாரியார்,அபிராமி பட்டர்,சித்தர்களில் ஒரு சிலர் கண்டறிந்து பாடல்களாக எழுதியிருக்கின்றனர்;அதில் ஒன்றுதான் திருமந்திரமும்,காகபுஜண்டர் சித்தரின் பாடல்களும்!!!)


மாயன் காலண்டர் 21.12.2012 அன்றோடு முடிவதை நாசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை;இதில் ஏதாவது உண்மை இருக்கலாம் என்று கருதி,பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வெளியிட்டிருக்கிறது;அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி நாம் வாழும் பூமியும்,சூரியனும்,சந்திரனும்,பால்வழிமண்டலமும் ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கு நிலைக்கு வர இருக்கிறது;இந்த ஒழுங்கு நிலையானது வரும் டிசம்பர் 23,24,25-2012 என்ற ஏற்பட இருக்கிறது!!!


 இதன் படி உலகத்தில் பருவநிலை மாற்றங்கள் திகைப்பூட்டும் விதமாக ஏற்பட இருக்கிறது;வட துருவம்  தென் துருவமாக மாற இருக்கிறது;பூமியின் புவியீர்ப்பு விசையில் மாற்றம் உண்டாகும்;மனித குல வரலாற்றில் மட்டுமல்ல;பிரபஞ்ச வரலாற்றிலும் இது மிகப் பிரம்மாண்டமான மாற்றமாக இருக்கும் என்று நாசா ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது;இந்த மாற்றத்தால் தனுசு ராசி மண்டலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது;மேலும் விபரமறிய நாசாவின் இந்த இணைப்பைச் சொடுக்கவும்;ஆங்கிலத்தில்  இருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவின் படி டிசம்பர் 23,24,25 இந்த மூன்று நாட்களும் யாரும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கிறது.செய்வோமா?


ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. இந்த மாற்றத்தால் தனுசு ராசி மண்டலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது

    இந்த மாற்றத்தால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு உண்டா ?

    பழனிமணி
    திருச்சி

    ReplyDelete
  2. ஆமாம்,சனியும்,செவ்வாயும் உச்சநிலையை எட்டி கடகராசியைப் பார்ப்பதால்,தனுசு ராசியினர் பயணத்தின் போதும்,வாகனம் ஓட்டும்போதும்,சாலையைக் கடக்கும்போதும்,நெருப்பு மின்சாரம் அருகில் இருக்கும் போதும் மிகுந்த கவனத்தோடு 23.2.13 வரை இருக்க வேண்டும்.

    ReplyDelete