Sunday, December 2, 2012

ஒரு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான பதிலும்!!!




??? கடந்த காலத்தில் பல பவுத்த விஹாரங்களை ஹிந்துக்கள் இடித்திருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்;அதற்கான ஆதாரங்களுடன் புத்தகங்களும் எழுதிவெளியிட்டுள்ளார்கள்;இவை உண்மைதானா?

!!! இந்த உலகில் தோன்றிய முதல் மதம் வைதீக தர்மமே(ஹிந்து தர்மமே).அதுவே இன்று ஹிந்து தர்மம் என்ற ப்ரதான பெயரால் அறியப்படுகிறது.
அதன் பின்னால் தோற்றுவிக்கப்பட்ட பவுத்த மதம் ஒரு அமைப்பு சார்ந்த(Organised Religion) மதமாக வளர்ந்தது.(இன்றைக்கும் ஹிந்து தர்மம் தவிர,அனைத்து மதங்களுமே அமைப்பு சார்ந்த மதமாக இருப்பதால் கடந்த 2000 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது)
அமைப்பு சார்ந்த எதையுமே அரசு பயன்படுத்த முயல்வதும்;அது போலவே அமைப்பு சார்ந்த மதம் தன் வளர்ச்சிக்காக அரசைப் பயன்படுத்த முனைவதும் உலக நடைமுறை.


ஆனால்,வைதீக தர்மம் அமைப்பு சார்ந்த மதமல்ல;தனி மனிதன் ஆன்மீகமுன்னேற்றத்திற்கு துணை நிற்கக்கூடிய வழிபாட்டுமுறைகளை அறிமுகப்படுத்தி அவனை ஆன்மீகரீதியாக உயர்த்துவது ஒன்றே அதன் உத்தேசமாக(நோக்கமாக) இருந்து வந்திருக்கிறது.
பவுத்தம் அரசியல் சார்ந்த மதமாக வளர்ந்த போது வைதீக தர்மத்தின் நிலைக்கலன்களாக விளங்கிய திருக்கோவில்களை அழித்து அவற்றை பவுத்த விஹாரங்களாக மாற்றியது.


தமிழ்நாட்டில் பவுத்தமும் சமணமும் அரசியல் துணை கொண்டு அழித்த ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன.


இன்றும் ஆலய கர்ப்ப கிருகத்தில் இருந்த சிவலிங்கத்தை அகற்றிவிட்டு அங்கு மஹாவீரர் சிலையை கோவிலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில மாற்றங்களை ஏற்படுத்தி நமது திருக்கோவில்களைத் தங்கள் வழிபாட்டுத்தலங்களாக சமணர்கள்  மாற்றிக்  கொண்டதற்குச் சான்று பகர்வது போல மேலசித்தாமூர்,விஜயமங்கலம் ஆகிய பல ஊர்களில் சமண ஆலயங்கள் சில(ஏறத்தாழ 25) அறநிலையத்துறையின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.பின்னாளில் பவுத்தமும்,சமணமும் தங்கள் அரசியல் செல்வாக்கை இழக்க நேர்ந்தன.


அரசியல் மட்டுமே பற்றுக்கோடாகக் கொண்டு வளர்ந்த அந்த மதங்கள் அரசியல் செல்வாக்கை இழந்தவுடன் மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்தே போயின.

அதனை அடுத்து வைதீக  மதம் புத்துணர்ச்சி பெற்று ஓங்கிய காலத்தில் ஆங்காங்கே இருந்த பௌத்த விஹாரங்களை மீண்டும் ஹிந்துத் திருக்கோவில்களாக மாற்றிக்கொண்டனர் ஹிந்துக்கள்.


தங்களது திருக்கோவில்களை ஒரு காலத்தில் இருந்து பின்னர் பவுத்த விஹாரங்களாக மாற்றப்பட்டவற்றை மீண்டும் திருக்கோவில்களாகப் புதுப்பித்துக் கொண்டது இயல்பான ஒரு வரலாற்று நிகழ்வே.இதனை யாரும் குறை கூற முடியாது.

பின்னாளில் இஸ்லாமிய,கிறிஸ்தவர்களும் நமது திருக்கோவில்களைத் தகர்த்து தங்கள் வழிபாட்டுத்தலங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஹிந்துக்களுக்கு சாதகமாகக் காலம் கனிந்து வரும்போது இத்தகையை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படப் போவது உறுதி.

நன்றி:இந்து தர்மம்,சந்தேகம் தெளிவோம் பாகம் 2,தொகுப்பு:ஆர்.பி.வி.எஸ்.மணியன்.

No comments:

Post a Comment