Friday, November 30, 2012

கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடக ராசியினருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!!!




சனிக்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்கள் மிக அபூர்வமானது ஆகும்.இந்த வருடம் 1.12.12 சனிக்கிழமை அன்று நம்மை இயக்கும் சனிபகவானின் கிழமையும்,சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரையும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடக ராசியினர் சனியின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.எந்த ஒருவேலையை எடுத்தாலும் அதை உடனே முடிக்கமுடியாமலும்,தான்  உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் வீணாக பிறர் சந்தேகப்படுதலும்,அவமானப் படுதலும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.எனவே,இந்த ராசிக்காரர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்.


சனிக்கிழமை வரும் இராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30க்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் செல்வோம்;போகும்போது அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,சந்தனம்,வில்வம்,விபூதி மற்றும் செவ்வரளிமாலை,உதிரி செவ்வரளி போன்றவைகளை வாங்கிக் கொண்டு சென்று பூசாரியிடம் கொடுத்து சனிக்கிழமை ராகுகால நேரத்துக்குள் ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்து விட வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது நாம் பின்வரும் ஸ்ரீகாலபைரவர் மந்திரத்தை ஜபிக்கலாம்.இந்த மந்திரத்தை நமக்கு அருளியவர் யுகங்கள் கடந்து வாழும் சித்தரான திரு.காகபுஜண்டர் ஆவார்.எனவே,மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கும்போது நமது குலதெய்வத்தை ஒருமுறை நினைத்துக் கொள்ள வேண்டும்;(உதாரணமாக ஓம் முனீஸ்வராய நமஹ என்று)பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும்,அடுத்தபடியாக இந்த மந்திரத்தை நமக்கு அருளிய சித்தரை நன்றியோடு நினைத்து, ஓம் காகபுஜண்டர் பெருமானே வாழ்க என்றும்,பிறகு ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி என்று ஜபிக்கத் துவங்க வேண்டும்.
ஒருவேளை காலையில் இவ்வாறு ஸ்ரீகாலபைரவருக்கு பூஜை செய்ய இயலாதவர்கள் மாலை 4.30முதல் ஆறு மணிக்குள் இதே போன்ற பூஜையைச் செய்யலாம்.இந்தப் பூஜையை முடித்துவிட்டு,நேராக அவரவர் வீட்டுக்குச் செல்லவேண்டும்.


ஒருவேளை பணக் கஷ்டத்தினால் இந்த பொருட்களை வாங்கி பூஜை செய்ய இயலாதவர்கள்,ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரையிலும் மேலே கூறியவாறு ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு நேராக கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின்மீது அமர்ந்து ஜபிக்கலாம்;இப்படி டிசம்பர் 2014 வரையிலும் ஜபிப்பது நல்லது;அப்படி ஜபிக்க ஆரம்பிக்க ஏற்ற நாள் நாளை!!!



ஸ்ரீகால பைரவரின்பிறந்த நாளானது கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஆகும்.இந்த மாதம் 6.12.12 வியாழக்கிழமை அன்று வருகிறது.அன்றும் இதே போல ஸ்ரீகால பைரவர் அபிஷேகம் செய்வது மிக மிக மிக நல்லது.இதன்மூலமாக சனியின் அன்பைப் பெறலாம்;ஏனெனில்,சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவராக இருப்பதால்,ஸ்ரீகாலபைரவரை விடாமல் வழிபட்டு நிம்மதியோடும்,நல்ல தொழில் வளர்ச்சியோடும் இருக்கலாம்.
மேற்கூறிய ராசியினரைத்தவிர,எல்லா ராசிக்காரர்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.


ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. hello sir as per your blessings we did the pooja but we cant able to do in time is it ok.
    in our city the temple open only by 5.30 pm. the we started the pooja and we finished .alot of joined our pooja.when furnish such ideas we are following. thanks for the proper guidance . by gopal

    ReplyDelete