Thursday, December 13, 2012

இந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா வேதனை


புதுடில்லி: இந்தியாவில் தொழில் துவங்க வருபவர்களுக்கு அரசே லைசன்ஸ் அளித்து, பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதை அரசே பிடுங்கிக்கொள்ளும் சூழல் நிலவுவதாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வேதனை தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனத்தின் தலைவராக கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ரத்தன் டாடா (75). தனது 50 ஆண்டு பணியை முடிந்து வரும் டிசம்பர் 28ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் தனது நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தொழில் சூழ்நிலை, வியாபார யுக்தி குறித்து தனியார் டி.வி., நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா தற்போது ஊழல்கள், கோர்ட் நடவடிக்கை, பழங்கால வரிவிதிப்பு முறை ஆகியவற்றால் காயப்பட்டு கிடக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு, அரசின் மீது ஒரு நம்பிக்கையில்லா தன்மை நிலவி வருகிறது.

நீங்கள் இந்தியாவில் தொழில் துவங்க விரும்பினால், அதற்கு உரிய லைசன்சை அரசிடமிருந்து பெற வேண்டும். பின்பு தொழில் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து அதே அரசாங்கம் உங்கள் லைசன்ஸ் சட்டவிரோதமானது என்று கூறும். நீங்கள் அனைத்தையும் இழந்து விடுவீர்கள். தற்போது இந்தியாவில் இந்த நடைமுறையே நிலவுகிறது. இந்தியாவில் இதற்கு முன் இவ்வாறு நடந்தததில்லை. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விதிகளில் அரசு ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் முடிவுகளை லேசாக எடுத்துக்கொண்டோமானால், பின்பு இந்தியாவும் லேசாக எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

எப்.டி.ஐ.,க்கு வரவேற்பு: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வரவேற்பு தெரிவித்த அவர், இம்முடிவுகள் இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல பலனைத் தரும் என்றும், ஆனால் இது மட்டுமே போதாது என்றும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவர் கூறுகையில், 90களில் நடந்த பொருளாதார சீர்திருத்தத்தின் சிற்பி என்றும், நேர்மையானவர் என்றும் புகழ்ந்துள்ளார்.thanks:dinamalar 9.12.12

No comments:

Post a Comment