Thursday, December 13, 2012

மன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்




இந்த சம்பவம் நிஜத்தில் திபத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது;இதையும் சீனாவில் நிகழ்ந்ததாக சீனா தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறது.திபத் ஒரு புத்தமத நாடு;அதே சமயம் மலைத்தொடர்களால் சூழப்பட்ட நாடு;புத்த சமயத்தின் மடங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன;வெகுதூரத்தில் இருக்கும் ஒரு மடாலயத்தில் ஒரு துறவி இருந்தார்;அவர் தனது சீடனை அழைத்து, ‘நீ தலைமை மடாலயத்துக்குச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்;எனக்கு வயதாகிறது;எனவே,எனக்குப் பிறகு இந்த மடத்துக்கு அடுத்த தலைமைத் துறவி தேவை;என்பதையும் சொல்’என்று கூறினார்.அந்த சீடனும் அங்கிருந்து புறப்பட்டான்;பல மாதங்கள் பயணித்து,பல மாநிலங்களையும் கடந்து தலைமை மடாலயத்தை வந்தடைந்தான்;


ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு,தலைமை துறவியை சந்தித்து,தனது குருவின் சூழ்நிலையைச் சொன்னான்;அதற்கு தலைமைத் துறவி,
“சரி,நீ நாளைக்கு நமது தலைமை மடாலயத்தில் இருக்கும் பத்தாயிரம் துறவிகளை அழைத்துச் செல்” என்றார்.இவனோ குழம்பிப் போனான்;ஒரே ஒரு தூரதேச மடாலயத்துக்கு ஒரு துறவிதான் தேவை;இவரோ பத்தாயிரம் பேர்களை அழைத்துச் செல்லச் சொல்கிறாரே என்று சிந்தித்தவன்,அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை;


மறுநாள் இந்த சீடனுடன் பத்தாயிரம் துறவிகள் அந்த தூரதேச மடலாயம் நோக்கிப் புறப்பட்டார்கள்;சில வாரங்களில் அந்த பத்தாயிரம் துறவிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக குறைந்தன;மேலும் சில வாரங்களில் ஐந்தாயிரம் ஆயிரமாகச் சுருங்கியது;அந்த தூரதேச மடாலயம் இருக்கும் மாநிலத்தை எட்டும் போது ஆயிரம் சில நூறுகளாக குறைந்து போனது;உடன் வந்த பத்தாயிரம் சீடர்கள் ஒவ்வொருவராக ஆங்காங்கே கழன்று கொண்டனர்;சிலர் திருமணம் செய்து கொண்டனர்;பலர் தமது பெற்றோர்களை சந்திக்கப் போய்விட்டனர்;சிலர் வழியில் இருக்கும் சிற்றரசுகளிடம் ஆஸ்தான குருவாக இணணந்து கொண்டனர்;இறுதியில் அந்த மடாலயத்தை அந்த சீடன் மட்டுமே அடைந்தான்;


சீடனைப் பார்த்த தூரதேச மடாலயத்தின் துறவி, “எனக்குப் பிறகு இந்த  மடாலயத்துக்கு நீயே தலைமைத் துறவி” என்று அறிவித்துவிட்டார்.அந்த சீடனிடம் என்ன நடந்தது? என்று கூட கேட்கவில்லை;


இந்த கதையை ஓஷோவின் புத்தகங்களில் அடிக்கடி வாசிக்கலாம்;
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது வெறும் கதை அல்லது நிஜத்தில் நிகழ்ந்த சம்பவம் என்று எண்ணிக் கொள்ளலாம்.இந்த கதையில் ஒளிந்திருக்கும் ‘கரு’ என்ன தெரியுமா?

நாம் பத்தாயிரம் விதமான எண்ணங்களை ஒவ்வொரு நொடியும் எண்ணுகிறோம்;ஆனால்,நமது வாழ்நாளின் முடிவில் ஒரே ஒரு நோக்கத்தில் மட்டுமே சாதிக்கிறோம்;நமது கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள்,சம்பவங்கள்,நிகழ்ச்சிகள்  பல கோடி நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இருக்கின்றன;அவைகளை நாம் உணரும்போது நமது இளமை நம்மைவிட்டு விடைபெற்றிருக்கும்;வாழ்க்கைப் பற்றிய அனைத்துப் புரிதல்களும் நம்முடன் நிரம்பியிருக்கும்;துடிப்பை மட்டும் இழந்திருப்போம்;ஏனெனில்,இந்த உலகில் நல்ல விஷயங்களும்,நமக்குத் தூண்டுகோல்களாக இருக்கும் ஆட்களும் மிக மிக மிக அபூர்வம்;ஆனால்,நம்மை திசை திருப்பும் சம்பவங்களும் நம்மை,நமது நோக்கங்களை சிதறடிக்கும் மனிதர்களையும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருப்போம்;


நமது லட்சியத்தில் ஜெயிப்பதற்கு பின்வரும்  புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்;அடிக்கடி இவைகளில் எதையாவது வாசித்துக் கொண்டே இருப்பது நம்மை நமது ஆளுமைத்திறனை உருவாக்கிடும்!!!


1.விவேகானந்தர்பாறை:நினைவுச் சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு
2.உங்களால் வெல்ல முடியும்=ஷிவ் கெரா
3.வீரபாண்டியன் மனைவி மூன்று பாகங்கள்
4.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்=சி.எஸ்.தேவ்நாத்=நர்மதா பதிப்பகம்
5.ஆழ்மனத்தின் சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்
6.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம்
7.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ
8.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரன் வெளியீடு
9.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்=விகடன் பிரசுரம் வெளியீடு
10.விலைராணி=சாண்டில்யனின் வரலாற்று நாவல்
11.கர்மயோகம்=சுவாமி விவேகானந்தர்
12.இஸ்ரேலின் வீர உதயம்
13.வந்தார்கள் வென்றார்கள்=மதன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டது
14.தலைமைச் செயலகம்=எழுத்தாளர் சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு
15.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய புதினம்

நமது மனவலிமையை நாம் ஒவ்வொருவருமே நமது அம்மாவின் கருவிலிருக்கும் போது பெறத் துவங்குகிறோம்;ஐந்து வயது முதல் பத்து வயது வரை நமது ஆசிரியர்கள் மூலமாகவும்,பதிமூன்று வயது முதல் இருபது வயது வரை நாம் யாரால் ஈர்க்கப்படுகிறோமோ அவர்களாலும் பெறுகிறோம்.இருப்பினும்,விடாமுயற்சியாலும்,தினமும் ஓம்சிவசிவஓம்  ஒரு மணி நேரம் வரை இடைவிடாமல் ஜபிப்பதாலும் பெற முடியும்.நமது பெருமைக்குரிய இந்து தர்மத்தின் பெருமைகளை புத்தகங்கள் மூலமாகவும்,வாரம் ஒருநாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமாகவும் பெறலாம்.


ஒம்சிவசிவஓம்

1 comment: