Wednesday, December 19, 2012

உலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு


வாஷிங்டன்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது: உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர். இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.                                                                   
அடேயப்பா! மதமாற்ற வேகம் இந்த அளவுக்கு வளர்த்துடுச்சா?

No comments:

Post a Comment