Wednesday, January 4, 2012

இறைவனை அறிவதற்கு ஒரே வழி - அன்னை


..நான் யார்?

இறைவன்

ஆனால், அதை உணரவேண்டுமானால், நீ உண்மையான உணர்வில் இருக்கவேண்டும். அது ஒரு புரட்சி, ஆனால் கால் விநாடியில் செய்துவிடக்கூடிய புரட்சி. அதைச் செய்ய பல ஆண்டுகள் ஆகவும் செய்யலாம், பல நூற்றாண்டுகள், பல பிறவிகள் கூட ஆகலாம்.

நீ யார் என இப்பொழுது எண்ணிக்கொண்டிருப்பது உண்மையான நீ அன்று: உன்னுடைய ஜீவனின் உண்மையை நீ இப்பொழுது உணரவில்லை என்பதை நீ உணரத் தொடங்கும்போது, அப்பொழுது இந்தக் கேள்வி எழுகிறது.

"ஆகக்கூடி இந்த நான் என்பது யார்? நான் என்று நான் உணர்வது ஒரு மாய உருவம் என்றால் நான் என்பது என்ன?"

இந்தக் கேள்வி மேலும் மேலும் தீவிரமடையும், மேலும் மேலும் நெருக்கமடையும், மேலும் மேலும் முனைப்பு பெறும். மெல்ல மெல்ல உன்னைப் பற்றி நீ கொண்டிருக்கும் உணர்ச்சி விநோதமாக, உண்மையல்லாதது போல, பொய் போலத் தோன்றும்.

"அப்படியனால் இந்த நான் என்ன?"

ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வி மிக அதிக ஒருமுனைப்புடனும் தீவிரத்துடனும் எழும், அப்பொழுது திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்படும். ஒரு இமைப் பொழுதில் எல்லாம் மாறிவிடும், உனக்கு இதுவரை அவ்வளவு உண்மையாகத் தோன்றியது ஒரு பொய்த் தோற்றம் என்பதை நீ அறிந்துகொள்வாய், காண்பாய், அனுபூதியாக உணர்வாய்.

இந்தக் கணத்திற்காக நீ பல நாட்கள், பல மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிதிருக்கலாம். ஆனால், நீ உன்னுடைய ஆர்வத்தை தீவிரமாக்கினால், அதன் அழுத்தம் மிகவும் அதிகப்பட்டு, கேள்வியின் தீவிரம் மிகவும் வலுவடைந்து உன்னுடைய உணர்வில் ஏதோ ஒன்றைத் திசை திரும்பச் செய்கிற...

இந்த அனுபவம் மிக மிகத் தெளிவாக இருக்கும், மிக மிகக் கண் கூடாகத் தெரியும், சந்தேகத்திற்கே இடமிருக்காது.

சில சமயங்களில் என்னிடம் இப்படிக் கேட்கிறார்கள்: ஒருவன் தன்னுடைய சைத்திய புருஷனுடன் தொடர்பு கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? "அல்லது ஒருவன் தான் இறைவனைக் கண்டுகொண்டதைத் தெரிந்துகொள்வது எப்படி?" உனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டுவிட்டது என்றால், விஷயம் அதோடு முடிந்தது, நீ அதன் பின் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டாய், அந்த வேலை முடிந்தது. அது அப்படி நிகழ்ந்தது என்று கேட்கமாட்டாய், அந்த வேலை முடிந்தது.

ஒருவன் இந்த வழியில் இறைவனை அடைய முடியுமா

2 comments:

  1. சார் புரியல.
    இன்னும் நல்ல விள்க்கமாக சொல்லுங்க.
    என்ன சொல்லவரீங்கனு புரியல சார்.

    ReplyDelete
  2. ராம ராஜன் அவர்களே, ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களுக்குத் தான் இந்த பதிவின் அர்த்தம் புரியும்.இது உணர்வு கலந்த பதிவு.

    ReplyDelete