Saturday, January 28, 2012

திருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்டம் நவகைலாசநாதர் திருக்கோவில்




21.12.2011 முதல் 30.12.2014 வரையிலும் சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்;இந்த துலாம் சனியானது, கன்னிராசிக்கு வாக்கு/பாதச் சனியாகவும், துலாம் ராசிக்கு ஜன்மச்சனியாகவும்,விருச்சிகராசிக்கு விரையச்சனியாகவும்,மீனராசிக்கு அஷ்டமச்சனியாகவும்,மேஷராசிக்கு கண்டச்சனியாகவும்,கடக ராசிக்கு அர்த்த அஷ்டமச்சனியாகவும் பரிணமித்திருக்கிறது.எனவே, இந்த ராசிக்காரர்கள் கடுமையான சனியின் தாக்கத்துக்கு உள்ளாவார்கள்.

இதில் துலாம் ராசியும்,மீன ராசியும் சனியின் தாக்கத்தால் 80 சதவீதம் வரையிலும்; கடகம் 40 சதவீதம் வரையிலும்;விருச்சிகமும் கன்னியும்  40 சதவீதம் வரையிலும்;மேஷம் 60 சதவீதம் வரையிலும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பார்கள்;குருப்பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை வருவதால்,இந்த சதவீதக்கணக்கில் சிறிது மாற்றம் வரும்;
சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷி தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாசங்களை உருவாக்கியிருக்கிறார்.அதில் சனிபகவானின் அம்சமான நவகைலாசத்தை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுவியிருக்கிறார்.நெல்லை மாவட்டம் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் நடுவே ஆற்றின் மையத்தில் அமைந்திருக்கும் நகரமே ஸ்ரீவைகுண்டம் ஆகும்.(ஆற்றின்நடுவில் இருக்கும் எந்த ஒரு கோவிலும் கலியுகத்தில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும்;ஆனால்,இதன் தாத்பரியத்தைப் புரிந்துகொண்டவர்கள் மிகச்சிலர் மட்டுமே!!!)இங்கு ஒரு பெருமாள் கோயில் இருப்பது அனைவருக்கும் தெரியும்.ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது.இந்த பெருமாள் கோயிலையும் தாண்டிச் சென்றால்,ஒரு சிறிய ,ஆனால் பழமையான,சக்திவாய்ந்த சிவாலயம் இருக்கிறது.இங்கிருந்து சனி அம்சமாக சிவபெருமானே அருள்பாலிக்கிறார்.

மேற்கண்ட ராசியினர்,1 கிலோ டையமண்டு கல்கண்டு,ரோஜாப்பூ மாலை,வெற்றிலை பாக்கு பழம்,பத்தி,வெண்பொங்கல் சாதம் போன்றவைகளை தயார் செய்து ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இங்கு கொண்டு வந்து,தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை முடிந்த பின்னர்,ஒரு மஞ்சள் துண்டினை விரித்து,வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் மனதால் ஜபிக்க வேண்டும்;பிறகு  மூலவரை ஒன்பது சுற்று சுற்ற வேண்டும்;சுற்றி முடித்த பின்னர்,இந்த வெண்பொங்கலையும்,டையமண்டு கல்கண்டையும் அங்கு வருவோருக்கு விநியோகிக்க வேண்டும்;எந்த ஒரு பொருளையும் வீட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது.

மணமானவர்கள் தேங்காய் உடைக்க வேண்டும்;வீட்டில் கர்ப்பிணி இருந்தாலோ & திருமணம் ஆகாமலிருந்தாலோ தேங்காய் வாங்கக் கூடாது.
இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் செய்து வர வேண்டும்;8 சனிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.மேற்கண்ட ராசியினர் 21.12.2011 முதல் 30.12.2014 வரை ஒரு போதும் அசைவம் சாப்பிடாமலிருக்க வேண்டும்.இவ்வாறு செய்தால்,சனிபகவானின் தாக்கம் இராது.இவ்வாறு செய்வது திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் செய்யப்படும் சனிப்ரீதிக்குச் சமமானது ஆகும்.

ஓம்சிவசிவஓம்






No comments:

Post a Comment