Saturday, January 7, 2012

சுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40


உங்களுக்கு ‘வைராக்கியம்’ என்றால் தெரியுமா? அதை ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட Determination என்று சொல்லலாம்.ஒரு தலைவராவதற்குரிய மிக முக்கியமான பண்புகளில் வைராக்கியம் முதன்மையானது; நெருங்கிய ஒருவர் இறந்துபோகும்போது,இடுகாட்டிலோ,சுடுகாட்டிலோ இனி நான் நல்லவனாய் வாழ்வேன் என்று சங்கல்பம் செய்கிறீர்கள்;இது அந்த நாள் வரைகூட தாங்காது; இதை ‘மயான வைராக்கியம்’ என்பார்கள்.அதே போல்,பிரசவ வலியால் துடிக்கும் பெண் கொள்ளும் வைராக்கியம்,அடுத்த பிள்ளை பெறும் வரைதான். இதை ‘பிரசவ வைராக்கியம்’ என்றும், ஒரு அருளுரை கேட்டபின்னர் எடுக்கும் முடிவு,வீடு சேரும் வரை கூட நிலைப்பதில்லை; ஆதலால் அதை ‘பிரசங்க வைராக்கியம்’ என்றும் அழைப்பார்கள்.
இங்கே சிந்திக்க வேண்டியது என்னவென்றால்,பிறப்பு இறப்பு மற்றும் மனதை நெருடும் ஆன்ம உரை என உடல்,மனம் மற்றும் அறிவு ரீதியான அனுபவங்களுக்கு நாம் ஆட்படுத்தப்பட்டும் கூட,ஏன் நாட்டைப் பற்றி நீங்களே எடுத்த முடிவில் நிலைத்து நிற்க முடிவதில்லை(உதாரணமாக உடலுக்கு தீங்குதரும் கோலா பானங்களை இனி அருந்தக்கூடாது என முடிவு செய்தபின்னர்,நாம் செய்வது என்ன?)
இது ஏனென்றால் வைராக்கியம் என்பது கண நேர முடிவு அல்ல;அது ஒரு வாழ்க்கைமுறை;நன்கு சிந்திக்கப்பட்டு நிதானமா செயல்படுத்த வேண்டிய கோட்பாடாகும்.
உதாரணமாக, காந்திஜியின் தனிப்பட்ட பிரம்மச்சரிய விரதத்தையும்,பொதுவாக மேற்கொண்ட சத்யாக்கிரக போராட்டத்தையும் கூறலாம்.ஒருவன் வைராக்கியம் மேற்கொண்டால் மற்றவை யாவும் தொடரும்.
கல்வி,ஆளுமை,உலகபிரசித்தம்,செல்வந்தரானாலும் தேவைக்கேற்று வாழ்பவர்,உலகப்பார்வை மற்றும் பெரும் கோட்பாடுகள் உடையவர்;கட்டுபாடுடையவர்;சமயப்பற்று,ஆன்மீகவாதி மற்றும் குடும்ப பண்புகள் உடையவர்.

இவை எல்லாமே ஒரு பெரும் தலைவருக்குரிய பண்புகள் என சொல்லலாமா? நண்பர்களே, மேற்சொன்ன அனைத்துமே ஒசாமா பின்லேடனுக்கும் பொருந்தும்.அப்படியெனில் பின்லேடன் பின்பற்றத்தக்கவரா? ஒசாமாவிற்குரிய சில பண்புகளை எடுத்துக்கொள்வோம்;ஒசாமா ஒன்றும் என் நண்பரில்லை;நம் ஆய்விற்கு அவர் ஒரு குறியீடுதான்.
உண்ணாவிரதம் இருந்த தொழில்முறை யோகியான ராம்தேவ் இரண்டே நாட்களில் சோர்ந்தே போனார்;ஆனால்,10 நாட்கள் உண்ணாவிரதம் கழிந்தபின்னர் அன்னா ஹசாரேவின் முக்கிய உடற்செயல்பாடுகள் அனைத்தும் சரியாக இயங்கின.அவர் ஒரு ‘மருத்துவ அற்புதம்’ என டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,மனச்சமன்பாடு (Equanimity of Mind).அதாவது இடுக்கண் நேரிடும் போது மன அமைதி கொள்ளுதல்;உலகை திறந்த மனதோடு பார்ப்பது அவசியம்,அச்சமின்றி சார்பின்றி நோக்குவது மற்றும் நல்லெண்ணங்களாய் மனம் நிரம்பி வழிதல் ஆகியன.
இத்தகைய மனிதரை நாம் கர்மயோகி என்று அழைக்கிறோம்.

அடுத்து மாபெரும் செல்வந்தர்,ஆனால் தேவைக்கேற்ப வாழ்பவர்,நாம் வளம்,செல்வம் ஆகியவற்றிற்கு எதிரானவர்கள் அல்ல;ஹிந்து வளர்ச்சி விகிதம், “கர்மாகேபிடல்” என இழிச்சொல் கூறி நம்மை மேற்கத்தியர்கள் வருணிக்கிறார்கள்.
கர்மா காபிடலோ,கர்மவினையோ சமயத்தில் உண்மையாகிவிடும்.நீங்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய் உடைய ‘ராஜா’வாக இருந்தாலும்,நீங்கள் திருப்தி அடைய வேண்டிய ரூ.17.60 மட்டுமே! ஆம்,அதுதான் திஹார் ஜெயிலில் கைதிகளுக்குத் தரப்படும் ஒருவேளை உணவுப்படி(per meal allowance).இதுதான் கர்மா காபிடலின் அர்த்தம்.வழிமுறைகள் மற்றும் இலக்குகள் நியாயமாக மட்டும் இருந்தால் போதாது.அவை தர்மம் சார்ந்து இருக்க வேண்டும்.நம் பாரம்பரியம் என்றும் செல்வம் மற்றும் வளம் உருவாக்குவதற்கு எதிரானது அல்ல;(நிறைய பணம் சம்பாதிப்பது பாவம் என்ற கருத்து இந்து தர்ம நம்பிக்கை அல்ல)
இருப்பதைப் பெருக்கி
பெருக்கியதை காப்பாற்றி
தேவைக்கேற்ப பயன்படுத்தி
மீதத்தை மனித நலனுக்கு பயன்படுத்து என்று நமது வேதங்கள் கூறுகின்றன.இசாவஷ்ய உபநிடதம்,இதையெல்லாம் கறிக்கு உதவாத ஆதர்ஷ கதைகள் என்று நாம் நினைக்கலாம்.நடைமுறைக்குரியது என்பதுதான் உண்மை.பில்கேட்ஸீம்,வாரன் பஃபெட்டும் இங்கு வந்து இந்தியச் செல்வந்தர்கள் இன்னமும் தாராளமாய் வழங்க வேண்டுமென்றார்கள்.சோனியாவும்,அமெரிக்காவிடமிருந்துதான் இந்தியா பரோபகாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழிமொழிந்தார்.(நமக்கு எப்படி தானம் செய்வது என்று தெரியாதாம்)

பில்கேட்ஸ்,வாரன்பஃபெட்,சோனியா எல்லோரும் வெளிநாட்டவர்கள்.அவர்களுக்கு இந்தியாவும் தெரியாது;இந்துப் பாரம்பரியமும் தெரியாது;அதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கப்போவதில்லை;ஆனால்,மண்ணின் மைந்தர்களான நாம் இந்திய பாரம்பரியம் பற்றி அறியாமல் இருக்கக் கூடாது.சுவாமி விவேகானந்தர் போதித்து டாடா உருவாக்கியதுதான் டாடா ஃபார் ரிசர்ச் இன் ஃபண்டமெண்டல் சயன்ஸ்!!! 114 டாடா கம்பெனிகளின் ஹோல்டிங் கம்பெனியான டாடா அண்டு சன்ஸின் 2/3 பங்குகளை டாடா அறக்கட்டளைகள் வைத்திருக்கின்றன.அதாவது டாடா வர்த்த சாம்ராஜ்ஜியத்தில் 2/3 லாபம் தர்ம காரியங்களுக்குச் செல்கிறது.
பில்கேட்ஸ் மற்றும் பஃபெட்டிற்கு லாபம் = குறி, தொழில்= வழி; பரோபகாரம்= உபரி; ஆனால் டாடா போன்றவர்களுக்கு பரோபகாரம்=குறி; தொழில்= வழி; லாபம்=உபரி!!!
பரோபகாரமும் கொடையும் இந்தியபாரம்பரியத்தில் மட்டுமல்ல இந்திய ஜீன்களாகவே இருக்கின்றன.அமெரிக்காவில் இப்போது பிரபலமாகி கொண்டுவரும் ஒரு சொற்றொடர், ‘வாலண்டரி பாவர்டி அதாவது தன்னார்வத்துடன் ஏழ்மையை ஏற்றுக்கொள்வது என்று பொருள்.இதைத்தான் நாம் காலம்காலமாக அபரிக்கிரகம் என்றழைக்கிறோம்.

நாம் செல்வத்தை வெறுப்பதில்லை;ஆனால் தேவைக்கேற்ப வாழ்பவர்களாவோம்;
ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவர் ஒசாமா.ஹிட்லர் கூடத்தான் ஒரு சீரிய ஒழுக்கவாதி.நாம் ஒழுக்கத்தை யோகமாக பாவிக்கிறோம்.மனம்,உடல் தூய்மைப்படுத்த யோக நியமங்களும்,உடலுக்கு யோகமும்,மூச்சுப்பயிற்சி மற்றும் ப்ராணயாமும் உள்ளன.இதுபோக புலன் நுகர்விலிருந்து விடுபட பிரத்யாகாரம்,சீரிய கவனம் பெற தாரணை,தியானம்,இறுதியாக சமாதி,இவையெல்லாம் பதஞ்சலி யோக சாஸ்திரம் சொல்லும் வாழ்வியல் வழிமுறைகளாம்.ஒரு நல்ல ஆசானிடம் யோகம் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஆலோசனை.
ஒசாமா பிடிபட்டு சுடப்பட்டபோது,தன் மனைவியோடுதான் இருந்தான்.எத்தனையாவது மனைவி என்று தெரியாது.ஆனால் , மனைவி.

கடந்த வருட மிஸ் யுனிவர்ஸ் யார் தெரியுமா? அவர் ஜிமென்னா நவரெத்தா.இவர் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்.
அங்க,அவய,வளை,நெழிப்போட்டிச்சுற்றுக்கெல்லாம் பிறகு அறிவுசார் சுற்று. அதில் உலகிற்கு உங்கள் செய்தி என்ன என்ற கேள்விக்கு,
‘குழந்தைகளுக்கு குடும்பப் பண்புகள் கற்றுக்கொடுப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவேன்’ என்று ஒரே போடு போட்டாள் அம்மணி.
தலையில் பிரபஞ்ச அழகி என்று கிரீடம் மாட்டிவிட்டார்கள்.
அதாவது குடும்பப் பற்றோ அல்லது பண்புகள் பற்றி அறிவோ இருப்பதற்கு வாய்ப்பு அரிதாக உள்ளவரிடமிருந்து இத்தகைய அறிவிப்பு!!!!!!!!!

நல்லதுதான் பாராட்டுவோம்.ஆனால்,ஜிமென்னாவின் கூற்றில் உண்மை இருக்கிறது.இன்று உலகம் முழுவதும் குடும்பங்கள் அழிந்தும், குடும்ப அமைப்பு என்ற கோட்பாடே வலுவிழந்தும் வருகின்றன.

நம் நாட்டில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமூகமாய் முன்னர் வாழ்ந்தோம்.பிறகு பெரிய கூட்டுக்குடும்பங்களாகவும் வாழ்ந்தோம்.இன்றைய சூழ்நிலையில் நியுக்ளியர் ஃபேமிலியாக அம்மா,அப்பா,குழந்தை என்று சிறு குடும்பமாக சுருங்கிவிட்டது.இதற்கும் கீழே போனால் குடும்பம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை;(உலக வர்த்தக அமைப்பில் இந்தியா 1.1.1995 இல் கையெழுத்திட்டது.விளைவு1.1.2005க்குள் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகுமளவுக்கு உலகமயமாக்கல் வளர்ந்துவிட்டது.இந்த உலகமயமாக்கலின் இறுதிகட்டமே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு;=இது இந்தியக்குடும்பங்களுக்கு எதிரான மன்மோகன்,சோனியா,மண்டேக்சிங்கின் கூட்டு அதிரடி & இறுதிகட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல் ஆகும்)
ஆனால்,இதுதான் இன்று மேற்கத்திய நாடுகளின் நிலை;அங்கே ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.அங்கே குடும்பங்கள் இல்லை;(இங்கே அந்த நிலை ஆரம்பமாகிக்கொண்டிருக்கின்றது).வெறும் மனிதர்கள்,பரஸ்பர வசதிக்காக ஒரு குழுவாக வாழ்கின்றனர்.அழியப்பெற்ற குடும்பங்கள் ஒரு செயல்பாடற்ற சமுதாயத்தை உருவாக்கி அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை உண்டாக்கிவிட்டன.இன்று 14 டிரில்லியன் டாலர் தேசிய கடன் உள்ள அமெரிக்காவின் தரத்தை அவர்கள் நாட்டு ரேட்டிங் ஏஜன்ஸி(தர நிர்ணய), ஸ்டாண்டர்ட் புவர், AA என இறக்கிவிட்டது.பாவம் அமெரிக்காவின்Standard  Poor ஆகிவிட்டது.

நம் நாட்டில் அதிகாரபூர்வமான மக்கள் தொகையை விட,அந்த வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்.இந்தியா இதை தாங்கி நிலைத்து நிற்கிறது.ஆனால்,அமெரிக்காவில் 30 கோடி ஜனத்தொகைக்கு 120 கோடி கடன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன.அதாவது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட,நான்கு மடங்கு கிரடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகள் இருக்கின்றன.ஒவ்வொரு அமெரிக்கனும்,அமெரிக்கச்சியும் தனது வாழ்க்கைத் துணையோடு இருக்கிறார்களோ,இல்லையோ,தோராயமாக நான்கு கடன் அட்டைகளோடு வாழ்ந்து வருகின்றனர்.
வெட்கமின்றி கடன் வாங்கித் திளைக்கும் அமெரிக்கா,ஒரு கடன்கார தேசமாகிவிட்டது அமெரிக்காவுக்கு துரதிர்ஷ்டம்.உலக நாடுகளுக்கு நிம்மதி.(ஆயுத அரசியல் போணியாகாமல் போய்விடுமல்லவா?)
மாற்றம் என்ற மந்திரத்தை பேசியே ஆட்சிக்கு வந்த ஒபாமா மாற்றியது ஒன்றை மட்டுமே.அது அவரின் மந்திரம்.இப்போது அவர்கள் கூறுவதெல்லாம், “ அமெரிக்க அம்மணிகளே,அடுக்களைக்குள் நுழையுங்கள்; அமெரிக்காவை காப்பாற்றுங்கள்” என்பதே!!!

அதாவது குடும்பப்  பண்புகள்,வழிமுறைகள் வேண்டுமாம்.ஒற்றை பெற்றோர், லிவ் இன் பார்ட்னர்ஷிப், விவாகரத்து மற்றும் விட்டு ஓடிய கணவன் & மனைவி என இவையெல்லாம் ஒரு குடும்பம் ஆகாது என்று நிதர்சனம் உறைக்கிறது.Welfare state(ஆக்க நல அரசு) நடைமுறைக்கு ஒத்து வராது;குடும்பப் பொறுப்புகளை தேசியமயமாக்குவது வேலைக்கு ஆகாது என்ற புரிதல் ரொம்ப தாமதமாக வந்திருக்கிறது.(நம்ம நேரு சீனாவை நம்பியதைப் போல). இதிலிருந்து Family Values என்பது Values of Economics ஆகிவிட்டது என்பதைப் பார்க்கலாம்.

இதெல்லாம் அமெரிக்கா,லண்டன்,சுவீடன் நாடுகளுக்குப் பொருந்தும்.நமக்கு என்ன ? என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் நாம் ஒரு காப்பிரைட் சமுதாயமாகிக் கொண்டு வருகிறோம்.
அறிதலின்றி,புரிதலின்றி,மேற்கத்தியர்கள் திணிக்கும் பிஸ்ஸா,கோக்,ஜீன்ஸ்,கார்ன் பிளேக்ஸ்,லிவ் இன் பார்ட்னர்ஷிப் என அனைத்தையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டிருக்கிறோம்.

இது நாளைடைவில் நம் பாரம்பரிய சமுதாயம் மற்றும் நாடு அழிவதற்கான ஏற்பாடாகும்.ஆகவே, நண்பர்களே,சகோதர,சகோதரிகளே,பாரதப் பண்பாடு மற்றும் பண்புக்கூறுகளின் வெளிப்பாடு தான் சுதேசி!!! உங்கள் எல்லோரையும் சுதேசியாக மாறிட அழைக்கிறோம்.நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையைக் கூட அசாதாரணமாக வாழ முடியும்.

பேச்சு:திரு.வானமாமலை

பேசிய இடம்:கொடைக்கானலில் நடந்த RYLA(Rotary youth Leadership Award) நிகழ்ச்சி.

ஆதாரம்: சுதேசிச் செய்தி,பக்கம் 21,22;அக்டோபர் 2011

3 comments:

  1. ஜயா வணக்கம் அருமையான பதிவு அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் மிக ஆனால் துல்லியமான விடையம் பற்றி பதியவில்லை. ஆதாவது
    இன்னும் துல்லியமாகவும்,முழுமையாகவும் பலன் பெற விரும்புவோர் முதல் 12 நிமிட ஹோரையை பயன்படுத்தலாம் மந்திர ஜபங்களில் ஈடுவோர் இந்த 12 நிமிடங்களை பயன்படுத்தி ஜபித்தால் பல நூறு மடங்கு புண்ணியமும் பெறலாம். இந்த தகவல் உங்களுயை பழைய பதிவில்லிருந்து பெறப்பட்டதே
    வாழ்க வளமுடன்.

    பாலசிங்கம்

    ReplyDelete
  2. லாபம்=உபரி!!!
    பரோபகாரமும் கொடையும் இந்தியபாரம்பரியத்தில் மட்டுமல்ல இந்திய ஜீன்களாகவே இருக்கின்றன.

    பயனுள்ள பாரம்பர்ய பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. கண்டிப்பாக இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அன்னியப் பொருட்களில் தரம் இல்லை. மேலும் அவை உடல் நலக் கேடு விளைவிக்கின்றது. குர் குரே சிப்ஸில் அறுபது விழுக்காடு பிளாஸ்டிக் கலந்துள்ளதாம். மேலும் பல உணவுப் பண்டங்கள் அர்த்தமற்று விற்றுக் கொண்டு இருக்கின்றன. இப்போது பெட்டிக் கடைகளில் எல்லாம் ஸ்வீட் பீர் விற்பனை செய்கின்றனர். ஆம் எங்கள் வீடு அருகில் இருபது ரூபாய்க்கு பீர் விற்பனை செய்யப்படுகிறது. கேட்டால் இந்த பீரில் alchahol இல்லையாம். சரி அப்டினா மேலை நாடுகளில் தயாரிப்பதை போல பீர் பழங்களுடன் இங்கு தயாரிக்கப்படுவதில்லை. வெறும் நீர் , கியாஸ் , மற்றும் கலர் ,
    எசன்சு மட்டுமே . மற்றொரு துயரமான செய்தி என்னவெனில் இப்போது சென்னை போன்ற பேரு நகரங்களில் குளிர் பானங்கள் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன. இந்த கடையில் எனது நண்பர் ஒருவர் குளிர் பானம் அருந்தி இரண்டு நாட்களாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார். நமது சுகாதாரத்துறை இதற்கு என்ன நடவடிக்கை செய்யும் ? ஏன் நமது நாட்டில் தரமான பொருட்களே இல்லையா ? ஏய் ஆளும் வர்க்கமே எங்களை வாழ வைக்க விட்டாலும் பரவா இல்லை. எங்களை நாசம் செய்யாதே, இது வரை செய்தது போதும். இனியாவது எங்களை முற்போக்கு சிந்தனில் போக விடு.

    ReplyDelete