Monday, December 5, 2011

சமூக வலைப்பின்னல்களி(Social Networks)லிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது?பாகம்-1




# Facebook, Orkut, Habbo, Myspace, Window Livespaces, Friendster, hi5, twitter, Vkon Takte . . .போன்ற சமூக வலைப்பின்னல்களில் நம்மைப் பதிவு செய்துகொள்ளும்போது, இரண்டு விதமாக அவற்றை நாம் அணுகலாம்;நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் என்றும், தொழில் ரீதியான செயல்பாடுகள் என்றும் இரண்டு முகங்கள் இருக்குமல்லவா?

அதனடிப்படையில் Professional மற்றும் Personnal சமாச்சாரங்களைத் தனியாகப்பிரித்துவிடுங்கள்.ஒவ்வொருவரும் தொழில்சார்ந்த விஷயங்களுக்காக ஒரு அக்கவுண்டையும்,விருப்பம் சார்ந்த விஷயங்களுக்காக ஒரு அக்கவுண்டையும் பயன்படுத்துவது நல்லது.இதையே ஆங்கிலத்தில் Professional & Personnal என்று சொல்லலாம்.
இப்படி நாம் அனுமதி கொடுக்கும்போது,நம் நண்பர்கள் மட்டும் பார்க்கும்படியோ அல்லது நம் நண்பர்களோடு நண்பர்கள் பார்க்கும்படியோ அல்லது உலகம் முழுவதும் பார்க்கும்படியோ அனுமதி கொடுத்துக்கொள்ளலாம்.
#  எப்படி இருந்தாலும் மிகவும் பர்சனலாக விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.இன்று சிறியதாக இருக்கும் நட்பு வட்டம் நாளை பெரிதாக விரிவடையும்போது பிரச்னைகள் வரலாம்.
# தெரியாத நபர்களை நம் நட்பு  வட்டத்தில் இணைத்துக் கொள்வது ரோட்டில் போகும் ஓணானை நாமே எடுத்து நம் சட்டைக்குள் போட்டுக்கொள்வதைப் போன்ற செயலாகும்.எனவே,தவிர்த்துவிடுவது நல்லது;அவசியமும் கூட!!!

# இண்டர்நெட்டில் நாம் செய்கிற பிழைகளை திருத்திக் கொள்ள வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.ஏனென்றால்,நாம் வெப்சைட்டுகளில் பதிவாக்குகின்ற தகவல்கள்/புகைப்படங்கள்/வீடியோக்காட்சிகள் போன்றவற்றை,நாம் பதிவு செய்த அடுத்த நொடியே நமக்கே தெரியாமல் பிரதி எடுத்துக்கொண்டே இருக்கும் வெப்சைட்டுகள்  இருக்கின்றன.நாம் அதைக் கண்டுபிடித்து நம் பதிவில் இருந்து நீக்குவதற்கு முன்,ஏற்கனவே பிரதி எடுக்கப்பட்ட வெப்சைட்டுகள் மூலம் பரவ ஆரம்பித்திருக்கும்.எனவே,இண்டர்நெட்டில் பதிவு செய்யும் முன் ஒரு முறைக்கு 100 முறை சிந்தித்து send அல்லது submit பட்டனை அழுத்துங்கள்.

# பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல்லை பத்திரப்படுத்துங்கள்.நம் பெயரையோ/வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரையோ கடவுச்சொல்லாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

ஆதாரம்: விஜயபாரதம் தீபாவளி மலர்,2011.








1 comment: