Tuesday, December 27, 2011

தேசபக்திநிறைந்த ஒரு நுகர்வோர் நலன் அமைப்பு(இது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு)




மத்திய அரசின் தவறான பொருளாதார,தாராளமயமாக்கல்,உலகமயமாக்கல்(அமெரிக்கமயமாக்கல்) கொள்கைகளால் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இதைக் கண்டித்தும்,உலகமயமாக்கலை இந்தியாவில் தடுத்து நிறுத்தக்கோரியும் பேரணி நடத்தி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் கோரிக்கை மனு அளித்தது அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து.(ஏ.பி.ஜி.பி)!
இதன் சாதனைகள்:
·       சென்னை எழும்பூர் சேலம் இடையே இரவு ரயிலினை அதிவேக ரயில் என்ற நிலையிலிருந்து(சூப்பர் பாஸ்ட்),விரைவு ரயில்(எக்ஸ்பிரஸ்) என மாற்றக்கோரி, பயணிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ரயில்வே நிர்வாகத்திடம் அளித்தது.இதன் மூலம் மேல்வகுப்பு பயணிக்கு ரூ.30/-ம்,இதர பயணிகளுக்கு ரூ.20/-ம் பயணக்கட்டணம் குறைக்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட் என்ற பெயரில் வேகம் குறைந்த ரயிலுக்கு அதிக கட்டணம் பெற்றது இதன் மூலம் தடுக்கப்பட்டது.மேலும் பயண நேரமும்,புறப்படும் நேரமும் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.
·       திருச்சி சென்னை இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் 1.5.11  லிருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது எனக்கூறி தாம்பரத்திற்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டது.
நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று திருச்சி,தஞ்சை,தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளிடம் கையெழுத்து பெற்று,தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்ததன் விளைவாக,1.5.11 லிருந்து எப்போதும் போல் தாம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.இது ஏ.பி.ஜி.பி.யின் இரண்டாவது சாதனை ஆகும்.

·       ஒரே தடத்தில் பலவித தடப்பலகை பேருந்துகள், ஒரே தூரப் பயணத்திற்கு பலவகை பயணக்கட்டணங்களை வசூலித்து வந்தது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்.
 இந்த அவலநிலையை அகற்றுவதற்காக சென்னை ஏ.பி.ஜி.பி. தொண்டர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி,ஆயிரக்கணக்கான பயணிகளிடம் கையெழுத்துக்களைப் பெற்று,தமிழக அரசின் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததன் பேரில் ஏ.பி.ஜி.பி.யின் கோரிக்கை நிறைவேறியது.
அதன் காரணமாக,சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருந்த 698 பேருந்துகளுடன் மேலும் 610 சாதாரண பேருந்துகளை இணைத்து,மொத்தம் 1308 சாதாரணக் கட்டணப்பேருந்துகளை இயக்கத் துவங்கியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.

·       சங்கடத்தையும்,குழப்பத்தையும் ஏற்படுத்திய பலவகை பேருந்து கட்டணம்,திருத்தி அமைக்கப்பட்டு நான்கே நான்கு வகை பேருந்து கட்டணமுறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு.இது நுகர்வோர் நலனுக்காக ஏ.பி.ஜி.பி. செயல்பட்டதற்கு கிடைத்த இன்னொரு வெற்றி!!
·        தரநிர்ணயம் செய்யப்படாத தராசுகளும்,எடைக்கற்களும் கொண்டு தி.நகர்,மாம்பலம் காய்கறி மார்க்கெட்டுகளில் நுகர்வோர் ஏமாற்றப்பட்டு வந்தனர்.ஏ.பி.ஜி.பி.யின் தொண்டர் கோதண்டபாணியின் சீரிய முயற்சியால்,முறைகேடாக வியாபாரம் செய்து வந்தவர்களிடம் இருந்து 62 எடைக்கருவிகளையும்,பலப்பல எடைக்கற்களையும் அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தனியொரு நுகர்வோரின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.


நுகர்வோரின் நலனுக்காக துவக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து ஆகும்.இது 1974 இல் பதிவு செய்யப்பட்டது.
30 மாநிலங்களில்,153 மாவட்டங்களில், 486 மையங்களுடன் கிளைபரப்பியுள்ள ஏ.பி.ஜி.பி.,1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் அமலாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.இந்த அமைப்பினை தங்கள் பகுதியில் துவக்கிட விரும்புவோர்,பின்வரும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
90435 17840, 99527 47525
மின் அஞ்சல்:grahakh.tnadu@gmail.com

நமஸ்தே!!
ஓம்சிவசிவஓம் 

No comments:

Post a Comment