Friday, December 9, 2011

கார்த்திகை மாத பவுர்ணமியை(9.12.11 வெள்ளி இரவு) பயன்படுத்துவோம்






ஒரு தமிழ்மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி உதயமாகுமோ,அந்த நட்சத்திரத்தின் பெயரையே அந்த மாதத்தின் பெயராக வைத்தார்கள் நமது முன்னோர்கள்;அந்த அடிப்படையில் கார்த்திகை மாத பவுர்ணமியானது இன்று 9.12.11 வெள்ளி இரவு மணி 6.57க்கு ஆரம்பித்து,10.12.11 சனி இரவு மணி 8.15க்கு நிறைவடைகிறது.ஆக,பவுர்ணமி திதியானது இன்று இரவுதான்!

கார்த்திகை தீபத்திருநாளை அண்ணாமலையில் பல நூறுகோடி ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.ஆமாம்,பல நூறு கோடி ஆண்டுகளாக!! ஏன் பிற பவுர்ணமி நாட்களில் கொண்டாடாமல்,கார்த்திகை மாத பவுர்ணமியை நமது முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

ஜோதிடத்தின் அடிப்படை அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் புரியும்.கார்த்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் முதல் பாதம் மட்டும் மேஷ ராசியில் இருக்கிறது.இரண்டாம்,மூன்றாம்,நான்காம் பாதங்கள் ரிஷப ராசியில் இருக்கின்றன.

குடும்பஸ்தர்களாகிய நமக்கு மகிழ்ச்சியான தாம்பத்தியம் வேண்டுமானால், உடலில் ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும்.(ரத்த காரகன் செவ்வாய் பகவான்;அவரது முதல் வீடு மேஷம்);அடுத்த படியாக சுக்கிலம் எனப்படும் நிறமற்றதிரவம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.(இதுவே பெண்களுக்கு சுரோணிதம்!)இந்த சுக்கிலமும்,சுரோணிதமும் சுறுசுறுப்பாக இருக்கக் காரணமாகிய கிரகம் சுக்கிரன் ஆகும்.இவரது முதல் விடு ரிஷப  ராசி ஆகும்.


ஆக,சுக்கிரனும்,செவ்வாயும் ஒருவரது ஜனன ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்,அவரது அந்தரங்க வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.யாருக்கு காமத்தில் போதுமான திருப்தி கிடைக்கிறதோ,அவரே வெளியுலக வாழ்க்கையில் சாதனையாளராகவும் இருப்பார்.


ஆக,கார்த்திகை மாத பவுர்ணமியன்று,அண்ணாமலையாரை நேரில் தரிசித்தாலும்,போட்டோக்கள்/வீடியோக்களில் தரிசித்தாலும் ; கார்த்திகை தீபத்தை நினைத்தாலும் புண்ணியமே!


கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்று அண்ணாமலையாரை அந்த ஒரே நாளில் 5 முறை கிரிவலம் வந்தால்,மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்;அப்படி சுற்றிய நொடியிலிருந்து அவரது அனைத்து கர்மாக்களும் நாசமாகிவிடும்.இந்தக் கருத்து,பல நூற்றாண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த கலியுகத்தில் ஒரு முறை கிரிவலம் செல்லவே நான்கு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது.ஆனால்,1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் நீளம் 150 கிலோ மீட்டர்கள்! 100 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் நீளம் 45 கிலோ மீட்டர்கள்.இன்றோ வெறும் 14 கிலோ மீட்டர்கள்!


எனவே, இந்த நாளில் ஒரு மணி நேரமாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;இன்று நள்ளிரவு மணி 12 முதல் 1 மணி வரையிலும்,நாளை 10.12.11 சனி காலை  7 மணி முதல் 8  மணி வரையிலும்,மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது.இந்த நேரத்தில் 15 நிமிடமாவது ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பார்ப்போமா?


இதில் மிகச் சிறந்த நேரமானது இன்று நள்ளிரவு மணி 12 முதல் 12.15 வரையிலான நேரமே மிக மிக மிக அமிர்தமான நேரமாகும்.இதைப் பயன்படுத்திக் கொள்வோமா?

ஓமசிவசிவஓம்


















No comments:

Post a Comment