Friday, December 16, 2011

விஜயபாரதம்(23.12.11) பஞ்சாமிர்தம் பகுதியிலிருந்து. . .




அது நல்லூர்; அது வெல்லூர்;

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடுத்த குர்ஸர் சதர் கிராமவாசிகள் இனி எதற்கும் அரசின் கையை எதிர்பார்ப்பதில்லை என்று தீர்மானித்தார்கள்.ஊரிலுள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 15,000 சதுர அடி நிலத்தை இழப்பீடு வாங்காமல் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தார்கள்.இதனால் ஊருக்குள் 5 கிலோ மீட்டர் நீள சாலையை அகல மாக்கிட முடிந்தது.ஊர் மக்கள் ‘ஆளுக்கு கொஞ்சம்’ போட்டு திரண்ட பணத்தில் 90 தெரு விளக்குக் கம்பங்களை நாட்டினார்கள்.சாலையோரம் ஊர் நெடுக 250  நிழல் மரக்கன்றுகள் நடப்பட்டன.பஞ்சாயத்து உறுப்பினர் திரு.பவன் ஜித்சிங் முதல் ஆளாக தனது நிலத்தில் முக்கால் ஏக்கர் அளவுக்கு (அதன் மார்க்கெட் மதிப்பைப் பற்றி கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்) பூமியை பஞ்சாயத்திடம் ஒப்படைத்ததுதான் எல்லோருக்கும் ஊக்கம் அளித்தது.பஞ்சாயத்தின் வேலை,ஊர் மக்கள் உபயத்தில் நிறுவப்பட்ட சாலைகள்,மரங்கள்,விளக்குக் கம்பங்களை முறைப்படி பராமரித்து வருவது மட்டுமே!

நன்றி:ஹிந்துஸ்தான் டைம்ஸ் 15.6.11


வேகம்,இங்கே நிச்சயம் விவேகம்!!!


15.6.2005 அதிகாலை 5.50!
சேரன் எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது.சூலூர்  இருகூர் இடையே 1500 பயணிகளுடன் ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டி ஒன்றின் கழிவறையிலிருந்து கரும்புகை சூழ்வது தென்பட்டது.ரயிலின் கார்டு திரு.கே.அருணகிரிசுவாமி மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.ரயிலை நிறுத்தினார்.பயணிகள் அனைவரையும் கீழே இறங்கச் செய்தார்.தீப்பிடித்த பெட்டியைக் கழற்றிவிட்டு,ரயிலை இருகூர் நோக்கி பயணிக்கச் செய்தார்.இவ்வளவும் எட்டரை நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.
“மிகச்சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்” விருதை பாரத அரசு அருணகிரிசுவாமிக்கு 10.4.2006 அன்று டெல்லியில் வழங்கி கவுரவித்தது.

நன்றி:தினமணி 12.4.2006 

No comments:

Post a Comment