Thursday, July 28, 2011

ஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழிமுறை










ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் கோவிலுக்குப் போவதை விட,சனியின் குருவாகிய பைரவரை தினமும் வழிபட வேண்டும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று பின்வரும் வழிமுறையைக் கொண்டு வழிபடுவதன்மூலம் சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.இது அனேகரது வாழ்க்கையில் கிடைத்த அனுபவ உண்மை!!



ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.



தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.



இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.



ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.

அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.



இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.



இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!







ஓம்சிவசிவஓம்



2 comments:

  1. தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவ சமாதி இருக்கிறது.

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அகத்தியரின் ஜீவ சமாதி இருக்கிறது.

    ஆந்திரமாநிலம் ஆனேகுந்தியில் ஒரே இடத்தில் ஒன்பது வைணவ மகான்களின் ஜீவ சமாதி இருக்கிறது.

    கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 69 மகான்களின் ஜீவசமாதி இருக்கிறது.
    திருஅண்ணாமலை கோவிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.ஆனால்,அது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை;கோவிலில் விசாரித்தும் விடையில்லை;
    பழனிமலையில் போகர் சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.
    மதுரை மீனாட்சியம்மன் கோவிலினுள் சுந்தரர் சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.
    திருப்பதி மலையில் மூலஸ்தனத்துக்கு மிக அருகில் கொங்கண சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.
    சென்னையில் பட்டினத்தாரின் ஜீவசமாதி இருக்கிறது.
    வடலூரில் வள்ளலாரின் ஜீவ உடல் வாழ்ந்து வருகிறது.
    ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் ஜீவ சமாதி இருக்கிறது.
    தஞ்சாவூரில் ரத வீதியில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.
    நாகப்பட்டிணத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.
    ராஜபாளையத்தில் அம்பலபுளிபஜாரில் குருசாமி என்னும் துறவியின் ஜீவசமாதி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.அவரது கோவிலுக்கு எதிர் தெருவில் கருப்பஞானியார்,சிவகாமி ஞானியார்,பொன்னப்பஞானியார் மற்றும் ஒரு சாதுவின் ஜீவசமாதி இருக்கிறது.
    தமிழ்நாட்டில் ஏராளமான ஜீவசமாதிகள் இருக்கின்றன.
    திண்டுக்கல் கோட்டையைச் சுற்றி இருக்கும் சுற்றுப்பாதையில் ஓதசுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கிறது.
    நெல்லை மாவட்டம்,ராதாபுரம் அருகே பத்து கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோர கிராமம் விஜயாபதி.இங்கிருக்கும் சிவாலயத்தின் பெயர் விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி.இந்த கோவிலுக்குள் ஒரு சித்தரின் சமாதியும்,கோவிலுக்கு வெளியே விஸ்வாமித்திரரின் கோவிலும் இருக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோடு,கைகாட்டி ரோட்டில் கைகாட்டி சுவாமிகளின் ஜீவசமாதியும்,ஊருணிப்பட்டித் தெருவில் பொன்னாயிரசுவாமிகள் மற்றும் வெள்ளைச்சாமிகள் இருவரின் ஜீவ சமாதிகள் இருக்கின்றன.
    இதே சிவகாசி ரோட்டில் கோவிந்தன் நகர் காலனியில் ,சாலையோரத்தில் பாம்புதின்னி சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கிறது.

    திருப்பரங்குன்றத்தில் காவல் நிலையம் அருகே மூன்று துறவிகளின் ஜீவசமாதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன.

    திருஅண்ணாமலையில் எட்டாவது லிங்கமான ஈசான லிங்கத்தின் வெகு அருகே பதினாறு சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன.இவர்களில் ஆறு சித்தர்கள் பெண் சித்தர்கள் ஆவர்.

    ReplyDelete
  2. விஷயமுள்ள பதிவிற்கும், ananymousன் விவரங்களுக்கும் நன்றிகள் பல. அது சரி, கும்பகோணத்தில் 69 மகான்களின் ஜீவசமாதி எங்கே இருக்கிறது?

    ReplyDelete