Tuesday, July 12, 2011

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-2

கேள்வி:ஆன்மீகக்கடல் ஆரம்பித்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்?

பதில்:ஒரு நல்ல விஷயம் எனக்குத்தெரிந்தால்,அதில் 100 சதவீதம் நிஜம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்வேன்.அதன்பிறகு,எனது நட்புவட்டம்,ஜோதிட வாடிக்கையாளர் வட்டத்தில் அந்த நல்ல விஷயத்தைப் பரப்புவேன்.அப்படி ஆரம்ப காலத்தில் பரப்பும்போது என்னை இவன் ஒரு கிறுக்கன்;இவனுக்கு வேற வேலையே கிடையாது என்றுதான் என்னை திட்டினார்கள்.இது 1990களில் நடந்தது.1995 இல் இந்தியாவுக்கு இணையம் வந்தது.

1997 முதல் இணையத்தில் நீந்திக்கொண்டிருக்கிறேன்.இன்று வரையிலும் அடிக்கடி தமிழ்கம்யூட்டர்,தினமலர்,கம்யூட்டர் உலகம்,தற்போது தினமலரின் கம்யூட்டர் மலர் போன்றவைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.



ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் ஒருமுறை யாகூவின் மின் அஞ்சல் நுழைவுப்பக்கம் மாற்றியமைக்கப்படுகிறது.ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருமுறையும் எந்த ஒரு இணையதளமும் தனது முகப்புப் பக்கத்தை புதுமையாக வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது.இந்நிலையில் பிலாக்ஸ்பாட்டை கூகுள் விலைக்கு வாங்கிவிட்டது.2008 இல் தமிழ்கம்யூட்டரில் தமிழா டாட் காம் யுனிகோடு முறையில் தமிழ் டைப்பிங் தெரியாமலேயே தமிழில் டைப்படிக்கும் முறையை விவரித்து ஒரு கட்டுரை வெளிவந்தது.அதுதான் ஆன்மீகக்கடல் பிறக்க உயிர் ஆதாரமாக இருக்கிறது.

தற்போது,என்னிடம் சேகரித்த அபூர்வ,அரிய,சிறந்த ,எல்லோருக்கும் உகந்த ஜோதிட,ஆன்மீக தகவல்களை ஆன்மீகக்கடலில் வெளியிடத்துவங்கி மூன்றாண்டுகளாகின்றன.எனக்குத் தெரிந்த வரையில் சுமார் 100 தமிழ் சகோதர சகோதரிகள் தனது வாழ்க்கையிலிருக்கும் சோகங்களிலிருந்தும்,தோஷங்களிலிருந்தும் மீண்டிருக்கிறார்கள்;ஒரு வாரத்துக்கு சுமார் 15,000 முறை ஆன்மீகக்கடல் பக்கங்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.பிறகு அதை பின்பற்றிவருகின்றார்கள்.

இப்போது சொல்லுங்கள்.நான் கிறுக்கனா?

11 comments:

  1. //இப்போது சொல்லுங்கள்.நான் கிறுக்கனா?//

    நிச்சயமாக நீங்கள் ஒரு கிறுக்கன் மட்டுமல்ல.

    ஒரு லூசுப்புன்டையும்தான்.

    ReplyDelete
  2. சித்தூர் எஸ்.முருகேசனைப் பற்றி ஒரு மதிப்பு வைத்திருந்தேன்.இந்த கமெண்டோடு அது காலி!!!

    ReplyDelete
  3. கெட்ட வார்த்தையை சொல்ல வேறு இடமே கிடைக்கவில்லையா முருகேசா?

    ReplyDelete
  4. vazhga ungal thondu,
    subramani, N.
    meenambakkam, chennai-600027,
    aathi1997@yahoo.co.in

    ReplyDelete
  5. ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிவ சிவ ஓம்

    ReplyDelete
  6. Name/URL என்ற option யை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் மறுமொழி இடலாம்....
    சித்தூர் எஸ்.முருகேசன் என்ற பெயரில் யாரோ விசமி செய்த வேலை இது ...

    உண்மையில் ஒளிபடம் வந்தால் தான் அது அவர் அவர் பெயரில் வரும் உண்மையான மறுமொழி...
    நான் "ஆன்மீகக்கடல்" என்ற பெயரில் இட்ட மறுமொழியை கவனிக்கவும் :)

    ReplyDelete
  7. நீங்க தந்தில உள்ள செய்திகள போட்டா பரவா இல்ல. ஆனா நீங்க ஸ்கேன் பன்னிருக்கிறது மாறனோட தினகரன்.
    அதனால நமக்கு இந்த எம்.ஜி.ஆர் வேலை பிடிக்காதுங்ணா

    ReplyDelete
  8. சித்தூர் முருகேசன் அவர்களே,என்னை மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. சித்தூர் முருகேசன் அவர்களே,என்ன செய்வது இந்தியாவின் தலைவிதி அப்படி! மாறனின் தினகரனில் கூட நமக்குத் தேவையான செய்திகள் வருகின்றன.மாறன் குடும்பம் அடாவடி மற்றும் ------ குடும்பம்தான்.தினகரனின் செய்திகளை வெளியிடுவதால்,மாறன்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமில்லை;

    வடகிழக்கு மாநிலங்களில் காய்ச்சல் வந்திருக்கும் பழங்குடி இந்துக்களுக்கு சர்ச்சிலிருந்து ஒரு ‘தீர்த்தம்’ தருவார்கள்.அதை பழங்குடி நோயாளிகள் அருந்தியதும் காய்ச்சல் குணமாகிவிடும்.அந்த தீர்த்தத்தில் குரோசின் பொடிசெய்து கலந்திருப்பது அவர்களுக்குத் தெரியாது.இப்படிக்கூட மதம் மாற்றுகின்றனர்.

    நமக்குத் தேவை குரோசின் மட்டுமே! அதுவும் காய்ச்சலைக் குணப்படுத்திட மட்டுமே!அதுபோல.. .

    ReplyDelete
  10. //நீங்க தந்தில உள்ள செய்திகள போட்டா பரவா இல்ல. ஆனா நீங்க ஸ்கேன் பன்னிருக்கிறது மாறனோட தினகரன்.
    அதனால நமக்கு இந்த எம்.ஜி.ஆர் வேலை பிடிக்காதுங்ணா//

    //சித்தூர் முருகேசன் அவர்களே,என்னை மன்னிக்கவும். //

    கவனிக்கவும்...இதுவும் போலி சித்தூர் முருகேசனின் வேலை.....ஒளி படத்துடன் ஒரு போலி profile create செய்து விட்டார் போலி..

    ReplyDelete