Monday, July 18, 2011

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்






தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்மைகள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.

முதல் தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகைதந்தவர்கள் என்னுடன் நான்கு பேர்கள்.

இரண்டாம் தேய்பிறை அஷ்டமிக்கு தாடிக்கொம்புவுக்கு வரும்முன்பாக இந்த நால்வருக்கும் அவரவர் தொழில்,குடும்பம்,திறமைக்கேற்றவாறு பொருளாதார அபிவிருத்தி அதிரடியாக நிகழ்ந்துள்ளது.

எனக்கு ரூ.5000/-கடன் ஒரே நாளில் தீர்க்குமளவுக்கு வருமானம் மொத்தமாக ஒரே நாளில் கிடைத்தது.

ஜாப் ஒர்க் செய்து வரும் எனது ஜோதிட வாடிக்கையாளர்,முதல் தேய்பிறை அஷ்டமிக்கு வரும்போது ஆர்டர் கிடைக்க வில்லையே ? என ஏங்கினார்.ஒரே மாதத்தில்,ஆர்டர்கள் குவிய,இவரால்,அத்தனை ஆர்டர்களையும் முடிக்க முடியாத அளவுக்கு பயங்கர பிஸியாகிவிட்டார்.

இன்னொருவர்,அரசு ஊழியர்.அவரது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

இறுதியாக,ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு நீண்டகாலமாக அவருக்கு வர வேண்டிய இருந்த ஒரு பெரிய தொகை,(ரூ.24,000/-) ஒரே நாளில் வசூலானது.

கர வருடத்தின் தேய்பிறை அஷ்டமி நாட்களும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கும் தமிழ்நாட்டு நகரங்களும்!!!

23.7.2011 சனிக்கிழமை

21.8.2011 ஞாயிறு

20.9.2011 வியாழன்

19.10.2011 புதன்

17.12.2011 சனி

16.1.2011 திங்கள்

14.2.2011 செவ்வாய்

15.3.2011 வியாழன்

சென்னை அருகிலிருக்கும் படப்பை;காஞ்சிபுரம் அருகிலிருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;
சிதம்பரம்;
சீர்காழி;
திருச்சி மலைக்கோட்டை அருகில்;

தேவக்கோட்டை அருகிலிருக்கும் தபசு மலை;

காரைக்குடி அருகே இலுப்பைக்குடி;

திண்டுக்கல் தாடிக்கொம்பு!!!

எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களே! தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்களை உருவாக்குவோம்;தமிழ்நாட்டை சொர்க்க பூமியாக்குவோம்!!!

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ayya, we are requesting you to post a dates for the year 2012, please

    ReplyDelete
  2. ayya, pls letus know the Sri Swarna Agarshana Bairavar Vazhipattu dates for the year 2012

    ReplyDelete