Sunday, July 17, 2011

விண்மணிக்கு நன்றிகள்

தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.








தொலைக்காட்சியில் சில சமயங்களில் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் நம் மனதை புண்படுத்தும்படியோ அல்லது மத உணர்வுகளை தூண்டும்படியோ இருக்கலாம் இப்படி ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிய புகார்களை நேரடியாக Indian Broadcasting Foundation மூலம் பதிவு செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.





இந்தியாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகள் முதல் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்சிகளை காரணத்துடன் நேரடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை பதிவு செய்ய ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://ibfindia.com/guidelines.php

Indian Broadcasting Foundation என்ற அமைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நம் மனதை புண்படுத்திய நிகழ்சிகளை அதற்கான காரணத்துடன் பதிவு செய்யலாம். இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் இருக்கும் Download the Complaint Form என்பதை சொடுக்கி பிடிஎப் வடிவில் படிவத்தை தறவிரக்கலாம் அல்லது நேரடியாக ஆன்லைன் மூலமும் புகார்களை அனுப்பலாம் , நேரடியாக புகார்களை அனுப்ப http://ibfindia.com/onlineform.php என்ற இணைய பக்கத்தை சொடுக்கி நம் புகார்களை அனுப்பலாம். சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஆபாசம் அல்லது தமிழ்மக்களை , கலாச்சாரத்தை , இழிவுபடுத்தி வரும் நிகழ்சிகளை பற்றிய உங்கள் புகார்களையும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிய புகார்களை பதிவு செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.





வின்மணி இன்றைய சிந்தனை

நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் நாம்

துணை புரியக்கூடாது.

No comments:

Post a Comment