Monday, May 9, 2011

பாம்பன்சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தின் மகிமை

முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;




பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று(17.5.2011 செவ்வாய்க்கிழமை)பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.





3 comments:

  1. தங்களது மேலான பார்வையில் இயங்கும் ஆன்மீகக்கடல் வலைப்பூ
    மிகவும் பயனுள்ள தளமாகும்.
    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின்
    குருபூஜைவிழா இந்த மாதம் 23.05.2011
    அன்று திருவான்மியூர் மயூரபுரத்தில் அமைந்த சுவாமிகளின் மகா சமாதி
    திருக்கோயிலில் நடைபெறுகின்றது.
    சுவாமிகளின் பாடல்களுக்கு கீழே
    கண்ட வலைப்பூ உதவும்.
    http://http://mscherweroyar.blogspot.com

    ReplyDelete
  2. thangalathu aanmikakkadal valaippoo unmaiyileye mihavum payanullathaakum. Thaangal ivatrai ezhuthuvathan nokkam padippavar payan peravendum enapathuthane. appadiyaanaal, andha "pampan swaamikalin" SHANMUKAKAVACHAM" En prasurikkappadavillai? adhu illadhadhinaal manam varuththamutren enpadhai thangal gavanaththirku kondu varukiren. thayavu seythu prasurikkavum.

    anban K.Varadarajan.

    ReplyDelete
  3. சிவத்தமிழ் குகமணி தெ. தனபால்.
    மிகவும் அருமையான வலைபூண். மேலும் தாங்கள் பாம்பன் சுவாமிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ www.pambanswamigal.org ஐ பார்க்கவும்.

    ReplyDelete