Sunday, May 15, 2011

ஆன்மீகக் கடல் வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்


புத்தகம் வாசிப்பது என்பது இலக்கில்லாத மிக நீண்ட பயணம்;யார் தனது பள்ளிப்பருவத்தில் தினமும் செய்தித்தாள் வாசிக்கிறார்களோ,அவரே கல்லூரிப்பருவம் மற்றும் அதன்பிறகும் வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவார்;அறிவே சக்தி என்ற கிரேக்க ஞானியின் கருத்து இந்த தகவல்யுகத்திற்கு மிகவும் பொருந்தும்.

நேற்று தினகரன் தினசரியில் ஒரு செய்தியை வாசித்தேன்.அது எனது மனதை மிகவும் பாதித்தது.கேரளாவில் ஒரு தம்பதி!கணவன் தனக்குப் பிடித்த நடிகையின் போட்டோவை தனது செல்போனின் முகப்பில் வைத்திருந்தான்;அதைப் பார்த்த மனைவி,அந்த நடிகையின் போட்டோ தனது கணவனின் கள்ளக்காதலி என நம்பி தற்கொலை செய்துகொண்டாள்.

இந்த செய்தியில் இரண்டு உண்மைகள் தெரிகின்றன.ஒன்று,அந்த மனைவிக்கு உலக நடப்பு பற்றிய அடிப்படை ஞானமில்லை;இரண்டு எந்தக் கணவனாவது தனது கள்ளக்காதலியை செல்போனில் எல்லோரும் பார்க்கும்விதமாக வைத்திருப்பானா? என சிந்திக்கவில்லை;மூன்று தனது கணவனிடம் யார் இவள்?என்று கேட்கவில்லை

இதன் மூலமாக அந்த மனைவி சிந்திக்கத் தெரியாதவள் என்பது புலனாகிறது.தினமும் எதையாவது படித்தால் தானே சிந்திக்கும் சுபாவம் வளரும்?

ஆக,வேர்களைப் பலப்படுத்திட,ஏற்கனவே பதிவிட்ட ஒன்றை சிறு மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடுகிறேன்.

யாரிடம் எப்படிப் பேசுவது? எங்கே எவ்வாறு நடந்து கொள்வது? என்பது பற்றி பலருக்குத் தெரியாமைக்குக் காரணமே வாசிக்கும் பழக்கம் இல்லாமையே!

இந்தப் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை இதில் சொல்லப்பட்டுள்ள வரிசைப்படி வாசிக்கவேண்டும்.ஒவ்வொரு புத்தகத்தையும் ஆறு மாதங்கள் வரையிலும் அடிக்கடி திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் நீங்கள் மன வருத்தத்தில் இருக்கிறீர்களோ,அப்போது முதல் புத்தகத்தை வாசிக்கவும்.ஓராண்டு கழிந்தபிறகு,உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுக்கு உள்ளார்த்தம் என்ன? அவர்கள் ஏன் அப்படிப் பேசுகின்றனர்? என்பது உங்களுக்குப் புரியும்.

சில புத்தகங்கள் நாவல்கள்,புதினங்கள்,வரலாற்று உண்மையை விவரிக்கும் கதைகளாக இருக்கும்.அவற்றை எப்போதும் எப்படியும் வாசிக்கலாம்.

1.எண்ணங்கள் / எம்.எஸ்.உதயமூர்த்தி=வானதி பதிப்பகம்

2.கர்மயோகம் /சுவாமி விவேகானந்தர்=ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் வெளியீடு

3.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்/ ஜேம்ஸ் ஆலன்

4.வந்தார்கள்;வென்றார்கள்/மதன்=விகடன் பிரசுரம் வெளியீடு

5.மனம் தரும் பணம்/நெப்போலியன்ஹில்=கண்ணதாசன் பதிப்பகம்

6.விழிமின்;எழுமின்/சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திர வெளியீடு(அங்கு மட்டுமே கிடைக்கும்)

7.விலை ராணி/சாண்டில்யன்=வானதி பதிப்பகம்

8.ஆழ்மனதின் சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

9.மனோசக்தி மாத இதழ்,சென்னையிலிருந்து உலகெங்கும் வெளிவருகிறது

10.தேசப்பிரிவினையின் சோக வரலாறு/ஹெ.வே.ஷேசாத்ரி

11.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்/இராம.கோபாலன்

12.என்று காண்போம் எங்கள் சிந்துவை/கேப்டன் எஸ்.பி.குட்டி

13.முன்கதைச் சுருக்கம்/பாலகுமாரன் அவர்களின் சுயசரிதை

14.ஓம்சக்தியும் அணுசக்தியும்

15.ஏழை படும்பாடு/விக்டர் ஹ்யூகோ/தமிழில் சுத்தானந்த பாரதியார்

16.நான் ஏன் நாத்திகனானேன்?/தந்தைப் பெரியார்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்

18.நாதுராம் விநாயக் கோட்சே/இஜட்.ஒய்.ஹிம்சாகர்=குமரிப் பதிப்பகம்

19.எப்படி ஜெயித்தார்கள்?சில மார்க்கெட்டிங் சாகசங்கள்/ரமேஷ் பிரபா

20.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்/சுவாமி சுகபோதானந்தா=விகடன் பிரசுரம் வெளியீடு

21.அர்த்த சாஸ்திரம்

22.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரை நூலகம்

23.ஞான கங்கை /குருஜி=சக்தி புத்தக நிலையம்

24.அர்த்தமுள்ள இந்துமதம் 18 பாகங்கள்/கண்ணதாசன்

25.கூடு/பாலகுமாரன்

26.கோட்டைப்புரத்து வீடு/இந்திரா சவுந்தரராஜன்

27.அடுத்த நூற்றாண்டு/சுஜாதா



No comments:

Post a Comment