Wednesday, August 18, 2010

சனியும் செவ்வாயும் தற்போது கன்னிராசியில்:

சனியும் செவ்வாயும் தற்போது கன்னிராசியில்


                          20.7.2010 முதல் 6.9.2010 வரையிலும் கன்னிராசியினை செவ்வாய் பகவான் கடந்து செல்கிறார்.ஒரு ராசியை செவ்வாய் பகவான் கடக்க ஆகும் காலம் 45 நாட்கள் ஆகும்.

                          கன்னிராசிக்குள் 20.7.2010 அன்று நுழைந்தது முதல் உலகம் முழுவதும்,இந்தியாவில் பெரும்பகுதியிலும்,தமிழ்நாட்டில் ஏராளமான பகுதிகளிலும் திடீரென போராட்டங்கள், கலவரம், ஜாதி மோதல், பதற்றமான மன நிலை,எதிலும் நிதானமற்ற தன்மை காணப்படுகிறது. இந்த நிலை 6.9.2010 வரையிலும் தொடரும். . .

             ஏற்கனவே கன்னிராசியில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். அவருடன் செவ்வாய் பகவானும் சேருகிறார்.இந்தச் சேர்க்கையானது மேற்கூறிய சம்பவங்களை 12 ராசிக்காரர்களுக்கும் ஒரு முறையாவது தரும்.

           தொடர்ந்து ஒரே கடவுள்/ குலதெய்வத்தை வழிபட்டுவருபவர்களுக்கும்; தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு வராது.

                    இந்தக் கிரகச் சேர்க்கையானது கன்னிராசி, மீனராசிக்காரர்களுக்கு அதிகமான பாதிப்பை உருவாக்க வாய்ப்புக்கள் உண்டு.

                    சனியின் பார்வையும்,செவ்வாயின் பார்வையும் கொடூரமானவை. சனியானது தான் இருக்கும் ராசியிலிருந்து 3,7,10 ஆம் ராசிகளையும்,செவ்வாயானவர் தான் இருக்கும் ராசியிலிருந்து 4,7,8 ஆம் ராசிகளையும் பார்ப்பார்.

                    ஆக, சனியும் செவ்வாயும் தற்போது மீன ராசியைப் பார்ப்பதால்,மீனராசியானது அதிகப் பாதிப்பை அனுபவிக்கும்.குருபகவான் மீனத்தில் தற்போது ஆட்சியாக இருந்தாலும்,அவர் வக்ரமடைந்து பலமிழந்திருக்கிறார்.

                   மீனராசி, கன்னிராசிகளைத் தவிர, மற்ற 10 ராசிகளும் ஓரளவு பாதிப்பை அடையும்.


எனவே,

                  எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போவதை ஒரு வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்;நிம்மதியாக வாழ்வீர்கள்.

1 comment:

  1. கோயில் இல்லாத ஊரில் இருப்பவர்கள் (சவுதி)என்ன செய்வது!

    அருண்முருகன்

    ReplyDelete