Thursday, August 26, 2010

இந்துக்களின் கணிதத்திறமையை மதிப்பிட முடியாமல் திணறும் மேல்நாட்டினர்:நன்றி தினமலர் 26.8.2010

பெரிய எண்களை பயன்படுத்திய இந்தியர்கள்: குழம்பும் வெளிநாட்டவர்கள்











ஐதராபாத் : பண்டைய இந்தியாவில் மிகப்பெரிய எண்களை இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த எண்களை அவர்கள் எப்படி, எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்து, வெளிநாட்டு கணித வல்லுனர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.







சமீபத்தில், ஆந்திர பிரதேச தலைநகர் ஐதராபாத்தில், சர்வதேச கணித வல்லுனர்கள் மாநாடு நடந்தது. அதில் பல்வேறு வெளிநாட்டுக் கணித வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர யூனியன் கல்லூரியில், கணித வரலாற்றுத் துறை அறிஞராக பணியாற்றும் கிம் ப்ளோப்கெர் என்பவரும் அதில் கலந்து கொண்டார்.இவர், சமஸ்கிருத நூல்கள், பவுத்தம் மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த நூல்களில் உள்ள எண்ணியல் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர், அம்மாநாட்டில் பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எண்கள் சம்பந்தமான ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.







அதில் இவர் கூறியிருப்பதாவது:கி.மு., 1400ல் இயற்றப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் யஜுர் வேதத்தில், 10 மடங்கிலிருந்து ஒரு லட்சம் கோடி எனப்படும் டிரில்லியன் வரையிலான எண்களை பற்றிய குறிப்பு உள்ளது. இந்த மிகப்பெரிய எண்கள், வேத கால வாழ்க்கை நடைமுறையில் எதற்கும் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை.







அதேபோல், மகாபாரதத்தில், பிரபஞ்ச காலமாக கணக்கிடப்பட்ட 400 கோடி ஆண்டுகள், 360 ஆண்டு கணக்காக பகுக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற மிகப்பெரிய எண்கள், பவுத்தம் மற்றும் ஜைன மத நூல்களிலும் காணப்படுகின்றன.கி.பி., 1650ல் ஜெர்மனி நாட்டு கணித வல்லுனர் ஜார்ஜ் கேன்டர் என்பவர், "இன்பினிடி' எனப்படும் "முடிவிலி' எண்ணைக் கண்டறிந்தார். ஆனால், பல முந்தைய பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜைன மத நூல்களில் "முடிவிலி' பற்றிக் கூறப்பட்டுள்ளது.கி.பி., 1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பவுத்த மத நூலில் ஆற்றின் கரையிலுள்ள நுண் மணல்களோடு எண்கள் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தைச் சேர்ந்த ஜைன மத நூல் ஒன்றில், இரண்டின் 588 மடங்காக ஒரு காலக் கணக்கு கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







இது குறித்து அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா ஆய்வு மையத்தின் கணித வல்லுனர் ஸ்ரீகிருஷ்ண தானி கூறுகையில், "இத்தகைய எண்கள், உலகின் வேறு எந்த கலாசாரத்திலும் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை. இயற்கையை உன்னிப்பாக ஆராயும் சில முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை சில சமயம் குழப்பத்தை உருவாக்கியுள்ளன' என்றார்.







அம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, பெங்களூரிலுள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையத்தின் மூத்த விஞ்ஞானி ரொட்டம் நரசிம்மா கூறுகையில், "மிகப்பெரிய எண்களும், மிகச்சிறிய எண்களும் இயற்கையில் உள்ள நுணுக்கமான முரண்பாடுகளோடு தொடர்புடையவை. பொருட்கள் எவ்வளவு பெரியவை, எவ்வளவு சிறியவை என்று காட்ட அந்த எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்' என்றார்.

No comments:

Post a Comment