Wednesday, August 11, 2010

அமெரிக்காவின் சுயகவுரவம் சீனாவின் கைக்குள்


அமெரிக்காவின் அரசுப்பத்திரங்கள் சீனாவின் கையில்

அமெரிக்கா வெளியிடும் அரசுப்பத்திரங்களின் பெரும்பங்கு (Treasury bonds,Treasury bills and Treasury notes)பெரும்பங்கு சீனாவின் வசம் இருக்கிறது.பல்வேறு நாடுகள் அமெரிக்க அரசுப்பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டினைப் பார்த்தால் அமெரிக்க அரசு எந்த அளவு பிறநாட்டுச்செல்வங்களினால் தனது பிழைப்பை (கடன் வாங்கி) நடத்துகிறது என்பது புரியும்:


சீனா 895.2பில்லியன் டாலர்கள்
இந்தியா 32.0பில்லியன் டாலர்கள்
ஜப்பான் 784.9பில்லியண் டாலர்கள்
பிரிட்டன் 279.0பில்லியன் டாலர்கள்
எண்ணெய் ஏற்றுமதி நாடுகள்
229.5 பில்லியன் டாலர்கள்
பிரேசில் 164.4 பில்லியன் டாலர்கள்
ஹாங்காங் 150.9பில்லியன் டாலர்கள்
ரஷ்யா 120.1பில்லியன் டாலர்கள்
தைவான் 124.8பில்லியன் டாலர்கள்

இந்த நிலையானது மார்ச் 2010 இல் உள்ள நிலையாகும்.ஒரு பில்லியன் டாலர்கள் என்பது 4700 கோடி ரூபாய்களுக்குச் சமம்.ஆக,சுமார் 42,000 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள அமெரிக்க அரசுப்பத்திரங்களை சீனா தன் வசம் வைத்துள்ளது.அவற்றை ஒரே நேரத்தில் விற்க முடிவு செய்தால் அமெரிக்காவின் நிலை அம்பேல்தான்.ஒருவேளை அப்படி செய்தால் அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல;சீனாவுக்கும் பாதகமாக முடியும்,
இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் சீனாவின் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கும் இலங்கை அரசு எப்படி இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்கும்?
அமெரிக்காவோ தனது இமேஜ் சரியாமலிருக்க,இலங்கை விஷயத்தில் இந்தியாவின் யோசனைப்படி செயல்படுகிறது என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அமெரிக்கா ஒரு மூழ்கும் கப்பல் என்பதை சீனா துல்லியமாக உணர்ந்து செயல்படுகிறது.இந்தியாவாகிய நாம்?

No comments:

Post a Comment