Tuesday, May 26, 2009

எது சரியான தமிழ்வருடப்பிறப்பு?


எது சரியான தமிழ் வருடப்பிறப்பு?

சூரியனை பூமி நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.பூமியானது சூரியனுக்கு அருகில் வரும் காலமே தமிழ்வருடப்பிறப்பாகும்.அதுவே சித்திரை 1ஆம் நாளாகும்.அப்போது தான் அக்னி நட்சத்திரம் எனப்படும் வெப்பநாட்கள் சுமார் 25 நாட்கள் வருகின்றன.

சூரியனிடமிருந்து வெகுதொலைவில் செல்லும் காலமே நமது குளிர்காலம்.நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதன் முடிவுப்படி கிடைத்த தீர்வுகளின் அடிப்படையில் நமது மரபுகளை உருவாக்கியுள்ளனர்.

வெறும் அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றி தை 1ஆம் நாளை தமிழ்வருடப்பிறப்பு என அறிவிப்பது தவறல்லவா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதலமைச்சராக இருந்தகாலத்தில் நாட்டிய மேதை பத்மாசுப்ரமணியம் ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார்.பெரியவர் ஜகத்குரு அவர்கள் பத்மாசுப்ரமணியத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.ஆஸ்திரேலியாவில்தமிழ் பேசும் பழங்குடி மக்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.நீ எப்போதாவது அங்கே சென்றால் இது பற்றி விசாரித்துவிட்டு வா என்றார்.

இச்சம்பவத்திற்குப்பிறகு,பத்மாசுப்ரமணியம் ஆஸ்திரேலியாவிற்குச்சென்றார். அங்கு தமிழ் பேசும் பழங்குடி மக்களைக்கண்டார்.இந்தியாவிற்கு திரும்பியதும் இது பற்றி பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்.
தமிழினத்தலைவராக இருப்பவர் இதைப்பற்றி மேற்கொண்டு ஏதாவது செய்திருப்பாரா?
அவர் அப்படி செய்திருந்தால் தமிழ்நாட்டிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஏற்றுமதி/இறக்குமதி பல மடங்கு பெருகியிருக்குமே!

அந்த ஆஸ்திரேலியப்பழங்குடி தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்தில் அங்கே நிர்வாகம் செய்வதற்காக அனுப்பப்பட்டவர்களாம்.இன்று வரையில் அந்த தமிழ்சகோதரர்கள் அங்கே வாழ்ந்து பல்கிப்பெருகி வாழ்ந்து வருகின்றனர்.


இதே போல, கன்னியாக்குமரிக்கும் தெற்கே 2000 கிலோ மீட்டர்கள் தூரம் வரை லெமூரியாக் கண்டம் ஒன்று இருந்தது.

அது தமிழ்பூமியாகவும் மனசக்தியைப்பயன்படுத்தி அதிசய உலகமாக அது இருந்திருக்கிறது.குமரியாறு,பஃறுளியாறு என பல நதிகள் அங்கே இருந்திருக்கின்றன.


அங்கே ஒரு மதுரை மாநகரம் இருந்திருக்கிறது.அது முதலில் கடலால் அழிந்த பிறகு,இன்றைய இலங்கையில் உள்ள கண்டிக்குத் தெற்கே சில நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இன்னொரு மதுரையை நமது தமிழ் முன்னோர்கள் உண்டாக்கியிருந்துள்ளனர்.அதுவும் கடலால் விழுங்கப்பட்டுள்ளது.

இப்போது இருப்பதுதான் வடமதுரை.
அட மாட்டுத்தாவணியில் இறங்குவோமே அது தான் இன்றைய மதுரை.
ஆக நாம் எவ்வளவு மிக நீநீநீண்ட பாரம்பரியம் உள்ளவர்கள்.ஏன் அது பற்றி ஆராயக்கூடாது.?
உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிக் வரையிலும் சுமார் 1 சதுர கி.மீ அளவிற்கு ஏராளமான தீவுகள் உள்ளன.அவை அனைத்து லெமூரியக்கண்டத்தின் மிச்சங்களே!!!

No comments:

Post a Comment