Wednesday, May 27, 2009

உண்மையான மகாபாரதம்-80 ஆண்டுகளுக்குப்பிறகு


புராதன மகாபாரதம் மீண்டும் வெளியீடு

கும்பகோணம் கல்லூரி சமஸ்க்ருத பண்டிதர் தி.ஈ.ஸ்ரீநிவாசாச்சாரியாரால் மொழி பெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ்ப்பண்டிதர் ம்.வீ.ராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு கி.பி.1908 லிருந்து கி.பி.1932 வரை பல தொகுதிகளாக மகாபாரதம் வெளியிடப்பட்டுள்ளது.அது வெளிவந்த காலத்திலேயே சுதேச மித்திரன்,ஹிந்து போன்ற பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இதை தாம் செய்ய விரும்பியதாகவும் ம.வீ.ராமானுஜாச்சாரியரின் வெளியீடுகளைப்பார்த்தப்பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 80 ஆண்டுகளுக்குப்பிறகு முழுமையான அளவில் மகாபாரதம் நிஜமான சம்பவங்களின் தொகுப்பாக வெளிவருகிறது.ஒவ்வொரு பாகமும் சுமார் 800 முதல் 1100 பக்கங்களைக் கொண்டது.ஒவ்வொரு பாகத்தின் விலை ரூ.450/-
இது பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை.(தரமான பொருளுக்கு விளம்பரம் தேவையா?)
கிடைக்குமிடம்:S.VENKATRAMANAN
SHRI CHAKRA PUBLICATIONS
DOOR NO:14,Valmiki Street
Plot No:78,Selvaraj Nagar Extention-2
URAPPAKKAM(WEST)
PIN:603 211.
Ph:044-27466110
நன்றி:விஜய பாரதம் 4.7.2008

No comments:

Post a Comment