Monday, May 4, 2009

அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


நமது இந்துமதத்தின் அடிப்படை ஆதாரங்கள்: பசு, விவசாயம், பெண்.நமது நாட்டில் 15.8.1947 வரை இவைப்போற்றப்பட்டன.
மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன.வளர்ந்தன.சுயச்சார்புள்ள கிராமங்கள் இருந்தன.15.8.1947 வரை 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.
இன்று,4.5.2009 நமது நாடு முழுவதும் 3 1/2 லட்சம் கிராமங்களே உள்ளன.நகர்மயமாதலால் ஏராளமான பிரச்னைகள்.பொறுப்பற்ற பசியை சிறிதும் அறியாத நமது அரசியல்தலைவர்களால் விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் கோவில்களைக்கொண்டே குடியிருப்புகள் உருவாகின.கடவுள் பக்தியிருந்ததால் பொய் சொல்லுதல், கொலை செய்தல்,திருட்டு,பிச்சையெடுத்தல் சிறிதும் இல்லாமலிருந்தன. உதாரணமாக, மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு மும்பை நகரம் உருவானது.டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷின் தலைநகரம்) பிறந்தது.காமாட்சியம்மனின் அருளால் காஞ்சிபுரம் தோன்றியது.கி.பி.1900 வரை 1800 கோவில்கள் காஞ்சிபுரம் நகர்முழுக்க இருந்தது.இந்த கோவில் நகரங்கள் சிறப்புப் பொருளாதார மையங்களாக செயல்பட்டு வந்தன.யாரும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் எந்த சிறிய சச்சரவு கூட இல்லாமல் நமது பாரதம் வளர்ந்தது.கலைகள்,தொழில்நுட்பம் வளர்ந்தன.
கி.பி.1940 வரையிலும் நமது பாரதம் நாடுமுழுக்க உணவு,தண்ணீர்,கல்வி இம்மூன்றும் விற்பனை செய்வது பெரும்பாவம் என கருதப்பட்டது.இன்றோ இவைதான் கொழுத்த லாபம் தரும் தொழில்கள்!!!
ஒரு போதும் இவை இனி இலவசமாக மாறாது.மேலும் விபரமறிய http://www.swadeshitn.org/ என்ற இணையதளம் செல்லவும்.
நமது நாடு எப்படியெல்லாம் அரசின் தயவின்றி சாதனைகள் படைத்துவருகிறது.அரசின் முட்டாள்த்தனமான செயல்பாடுகளால் ஏற்படும் பிரச்னைகள், அதை நாம் எதிர்கொள்ள செய்ய வேண்டியது போன்ற விபரங்களை இவர்கள் சுதேசிச் செய்தி என்ற மாத இதழாக வெளியிடுகின்றனர்.ஆண்டுச்சந்தா ரூ.100/-மட்டுமே! மேலும் விபரமறிய திரு.நம்பிநாராயணன் 0-94431-40930 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment