Saturday, May 2, 2009

ருத்ராட்சத்தின் மகிமைகள்


ருத்ராட்சம்:இதுவரை நான் அறிந்தவை

சிவபெருமானின் அம்சமாக ருத்ராட்சம் இருக்கிறது.
இவை பெரும்பாலும் நேபாளத்தில் கிடைக்கிறது.
ஒருமுகம் கொண்ட ருத்ராட்சம் உண்டு.இதை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சத்தை குருமுகமாக மட்டுமே அணிவது அவசியம்.
நேபாளம் தவிர அடர்ந்த மலைப்பகுதிகள் முழுவதும் (இந்தியாவெங்கும்) விளைகின்றன.இது தன்னைச்சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது.எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்திவட்டம் தூய்மையடைகிறது.இந்த ஒளி அவரவர் உடல்நிலை மற்றும் மன நிலையைப் பொறுத்து மாறும்.

நீங்கள் புது இடத்திற்குச் செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது.ஆனால்,ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும்.சக்திவட்டம் நம்மை கவசம் போல பாதுகாக்கும்.
32 முக ருத்ராட்சமும் உண்டு.இதுவும் அபூர்வமான ருத்ராட்சமே!
ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும்.ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம்.இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும்,சுறுசுறுப்பையும் தரும்.

ஆறு முகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.
நன்றி:ஆன்மீகமலர்,பக்கம் 2. தினமலர் 25.4.2009

No comments:

Post a Comment