Friday, April 8, 2016

கடன் தொல்லைகள் விலகிட பாட வேண்டிய பதிகம்!!


வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக்கார் அமண் தேரரை
எய்தி வாது செயத் திரு உள்ளமே
மை திகழ் தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறிதலைக் கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திரு உள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த ஆழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திரு உள்ளமே
முறித்த வாள் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்த செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திரு உள்ளமே
வெந்த நீறதணியும் விகிர்தனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அழலதோம்பும் அரு மறையோர் திறம்
விழலதென்னும் அருகா திறத்திறம்
கழல் வாது செயத் திரு உள்ளமே
தழல் இலங்கு திரு உருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையு எம் ஆதியே

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திரு உள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியது ஓர்
கோல மேனியதாகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்று வாது செயத் திரு உள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment