Tuesday, April 12, 2016

சாலியர்களின் முதல் குலதெய்வம் அரிய மாணிக்கவல்லி!!!


உசிலம்பட்டியில் இருந்து 12 கி.மீ தூரத்திலும்,பேரையூரில் இருந்து 22 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் சிற்றூர் மேலத்திருமாணிக்கம்;பேரையூரில் இருந்து 12 கி.மீ.தூரம் தேனி சாலையில் பயணித்தால் சின்னக்கட்டளை என்ற கிராமம் வரும்;அந்தக் கிராமத்தைக் கடந்ததும் மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் 10 கி.மீ.தொலைவில் பயணித்தால் மேலத்திருமாணிக்கம் என்ற சிற்றூரை அடையலாம்;

1000 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிய சமுதாயம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றது என்பதற்கு அன்னை அரியமாணிக்கவல்லியின் அருளாற்றலே ஆதாரம்!

எட்டு கைகளுடன் சாந்தமுகத்துடன் காட்சி தரும் அரிய மாணிக்கவல்லி, சிங்கத்தை தனது நந்தியாகக் கொண்டு வடக்கு நோக்கியவாறு அருள்புரிந்து கொண்டு அரசாட்சி புரிந்து வரும் அன்னையைத் தரிசித்தாலே பரவசம் உருவாகின்றது;

சிவ ஆலயங்களில் நந்தி அமைக்கப்பட்டிருக்கும்;சிவாலயத்தினுள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும்,நந்தியை வணங்கி முறைப்படி அவரிடம் சிவனைத் தரிசிக்க அனுமதி மானசீகமாகக் கேட்க வேண்டும்;அதன் பிறகே,சிவனை வழிபட மூலஸ்தானத்திற்கு முன்புறம் இருக்கும் அறைக்குள் நுழைய வேண்டும்;அதே போல,தமிழ்நாட்டில் வெகு சில அம்மன் ஆலயங்களில் மட்டுமே அம்மனின் எதிராக சிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது;அப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் மேலமாணிக்கம் அரியமாணிக்கவல்லி ஆலயம்! அதுவும் ஒரு சமுதாயத்தின் ஆலயமாக சாக்தவழிபாட்டு ஆலயம் அமைந்திருப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு ஆகும்;


ஆலயத்தின் அருகில் மேற்கு நோக்கியவாறு  சப்த கன்னியர்களுக்கு நடுவே மஹாகால பைரவப் பெருமான் காட்சியளிப்பது உலக வரலாற்றில் வேறு எங்குமே இல்லாத அமைப்பாகும்;


ஆமாம்! சப்த கன்னியர்கள் ஒரு இடத்திலும்,கால பைரவப் பெருமான் வேறு ஒரு இடத்திலும் தான் ஆலயத்தில் இடம் பெறும்;ஆனால்,இந்த ஆலயத்தில் சைவ ஆகமங்களில் அதி ரகசியமான அமைப்பாக வராகியின் அருகில் மஹா காலபைரவப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றார்;


ஆக,சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முற்காலத்தில் சிவ உபாசனையுடன் வராகி உபாசனை செய்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகின்றது;

உலகின் மிகவும் பழமையான வழிபாடு சிவவழிபாடு ஆகும்;அந்த சிவ வழிபாடு உருவாகுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கும் முன்பே உருவானது சாக்த வழிபாடு எனப்படும் ஸ்ரீவித்யா உபாசனை! அந்த ஸ்ரீவித்யா உபாசனையின் உயர்வானதும்,மிக எளியதும்,மிகவும் சக்தி வாய்ந்ததுமாக இருப்பது வராகி வழிபாடு ஆகும்;அந்த வராகிக்கு அரசாலை,மங்களமகாகாளி,ஆதி வராகி,ஆதியன்னை,குதிரைக்காரி என்று 1000 பெயர்கள் இருக்கின்றன;

எப்போது ஒரு சமுதாயம் தமது குலதெய்வத்தை வழிபடுவதைக் கைவிடுகின்றதோ,அப்போதே அவர்களின் வீழ்ச்சி துவங்குகின்றது என்றுதான் அர்த்தம்;

சுமாராக 300 ஆண்டுகளாக நமது அன்னை அரியமாணிக்கவல்லியை வழிபட மறந்துவிட்டோம்;எனவே,இதில் இருந்து மீள்வதற்கும் ஒரு வழி இருக்கின்றது;

மாதாந்த வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கே இங்கே வந்துவிடவேண்டும்;
108 எலுமிச்சைம்பழங்களை மாலையாக கோர்த்து,மஞ்சள் பொடி,அரகஜா,பன்னீர்,இளநீர்,தேங்காய்,நாட்டு வாழைப்பழங்கள்,பத்தி இவைகளுடன் இங்கே வரவேண்டும்;எலுமிச்சை சாதம் அன்னையின் முன்பாக சமைக்க வேண்டும்;அப்போது ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி,அரியமாணிக்கவல்லி என்று ஜபிக்க வேண்டும்;

சமைத்த எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு படையிட்டு,ஒவ்வொருவரின் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;நிறைவாக பெண்கள் குலவையிடவேண்டும்;படையல் இட்டதில் பாதியை எடுத்துக் கொண்டு அங்கே இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்;நாமும் சாப்பிட வேண்டும்;

இவளின் சன்னதியில் பெண்கள் தெற்கு நோக்கியவாறு நின்று கொண்டு ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி,அரியமாணிக்கவல்லி என்று 15 நிமிடம் வரை ஜபிக்கவேண்டும்;போதுமான நேரம் கிடைக்காதவர்கள் 12 முறை ஜபித்தாலும் போதும்;பிறகு,வராகியின் 12 பெயர்களை 12 முறை ஜபிக்க வேண்டும்;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

இவைகள் தான் ஆதிவராகி என்ற மங்களமகாகாளி என்ற அரசாலை என்ற ப்ருகத்வராகி என்ற அரியமாணிக்கவல்லியின் அரிய பெயர்கள்;இந்தப் பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் `15 நிமிடமும் ஜபித்து வருபவர்கள் சகல வளங்களும்,நலங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்;

இவர்களுக்கு எதிரான அனைத்து சதிகளும்,எதிர்ப்புகளும் முறியடிக்கப்படும்;


ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி அரியமாணிக்கவல்லி

No comments:

Post a Comment