Thursday, April 7, 2016

நாம் ஒவ்வொருவரும் ஏன் அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைய வேண்டும்?


ஏன் எனில்,நாம் மனிதப் பிறவி எடுத்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன;திரும்பத் திரும்ப இந்த பூமியில் பிறந்து கொண்டே இருக்கிறோம்;ஒரு பிறவியில் அதிகமான புண்ணியம் செய்தால்,அடுத்த பிறவியில் வசதியான,ஜாலியான வாழ்க்கை அமைகிறது;செல்வச் செழிப்பு வரும் போது கூடவே செல்வச் செருக்கு(பணத்திமிர்)ம் வந்துவிடுகிறது.எனவே,கண்டதற்கெல்லாம் ஆசைப்படுகிறோம்;ஆசை நிறைவேறாத பட்சத்தில் நாம் செய்யும் மூர்க்கமான செயல்கள் நமது பிறவிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றன;

ஒரு நடிகையைப் பார்த்து மோகம் கொண்டால் அவளை அனுபவிப்பதற்காகவே இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது.நம்மை நினைத்து யாராவது ஏங்கிவிட்டால் அவர்களுடன் வாழ்வதற்காகவே அந்த ஒருவருக்காக நாம் இன்னும் ஒரு பிறவி அதிகமாக எடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த பிறவிச்சுழலை அறுத்து ஒரு போதும் பிறக்காமல் இருக்க சிவ வழிபாடு,பைரவ வழிபாடு,வராகி வழிபாடு என்று மூன்றுவிதமான வழிபாடுகள் இருக்கின்றன;

இதில் தொடர்ந்து மூன்று பிறவிகளாக சித்தரின் சீடராக இருந்திருந்தால் இப்பிறவியில் பைரவரை வழிபடத் துவங்குவோம்;அல்லது கடந்த மூன்று பிறவி முழுவதும் சிவ வழிபாடு செய்திருந்தால் இப்பிறவியில் பைரவ வழிபாட்டு முறைகள் நம்மைத் தேடி வரும்;இந்த சித்த ரகசியத்தை நமக்குத் தெரிவித்திருப்பவர் சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் ஆவார்;

தொடர்ந்து மூன்று பிறவிகள் முழுவதும் பைரவப் பெருமானைச் சரணடைந்தப் பின்னரே நமக்கு அன்னை அரசாலை(வராகி) என்பவள் யார்? என்றே அறிய முடியும்;

ஆமாம்!
இப்பிரபஞ்சத்தில் சக்தி ரூபமாக இருப்பவளும்,நம்மை கதி மோட்சம் கொடுப்பவளுமாக இருப்பவளே அன்னை அரசாலை என்ற வராகி!!

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை தாலுகாவில் மங்கள மகா காளியம்மன் என்ற பெயரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறாள்;

காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலை என்ற பெயரில் அருளாட்சி புரிந்து வருகிறாள்;

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலில் ப்ருகத் வராகி என்ற பெயரில் உலகத்தை ஆண்டு வருகிறாள்;

மதுரையில் மீனாட்சியாக அருள்புரிந்து வருகிறாள்;

திருச்சி திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக அரசாண்டு வருகிறாள்;

காசியில் அன்னபூரணியாகவும்,விசாலாட்சியாகவும் நிர்வகிப்பதோடு,64 படித்துறைகளில் 64 வித பைரவப் பெருமான் களோடு 64 வித வராகிகளாகவும் இப்பூமியை ஆண்டு வருகிறாள்;

பணம்,செல்வ வளம்,ஆடம்பரம்,பூஜைப் பொருட்கள் மூலமாக இந்த அன்னையின் அருட்பார்வையைப் பெற முடியாது;

நியாயமற்றவர்களை பாரபட்சமின்றி தண்டிப்பதோடு தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாப்பதில் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே!!!

ஒருபோதும் பிறருக்குத் தீங்கு தராமல்,பிறரின் நயவஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு,பிறரின் பொறாமைச் செயல்களால் துன்பப்பட்டு வேதனைப்படுபவர்களுக்கு உடனடியாக வரமும்,பாதுகாப்பும் அருள்பவள் இந்த பிரபஞ்ச அன்னை!!!

84,00,000 உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் ஒவ்வொருவரும் பிறவி எடுத்தப் பின்னரே,இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்;என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

மனிதப் பிறவி எடுத்ததில் இருந்து நம் ஒவ்வொருவரையும் ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற க்ரியமாண கர்மா என்று மூன்று கர்மாக்கள் தான் நம்மை இயக்குகின்றன.


அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைந்தால் இந்த மூன்று கர்ம்மாக்களையும் ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளிவிடுவாள்;


அப்படி வீசித் தள்ளிவிட்டால்,நமக்கு இனி ஒரு பிறவி இந்த பூமியிலும்,எந்த பூமியிலும் கிடையாது;(பல பிரபஞ்சங்கள் உள்ளன;பல பூமிகள் உள்ளன;பல மனித இனங்கள் இருக்கின்றன;நாம் வாழும் பூமியில் தான் கோவில்,ஆன்மீகம்,தியானம்,தவம் இருக்கின்றது;நாம் வாழ்ந்து வரும் பூமியிலும் நமது பாரத நாட்டில் மட்டுமே இவைகள் அனைத்தும் இருக்கின்றன)ஆமாம்! முக்தியைப் பெற்றுவிடுவோம்;


எப்படி அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைவது?

எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கும் விதமாக வழிபாடு செய்வது?

அதற்கு முன்பு இந்த மூன்று கர்மாக்களின் சுபாவங்களைப் புரிந்து கொள்வோம்;அப்போதுதான் இந்த அன்னையின் கருணையை உணர்ந்து கொள்ள முடியும்;

1.சஞ்சித கர்மா(கூட்டுவினை):நமது பல முற்பிறவிகளில் செய்த செயல்களால் நாம் சேர்த்து வ்ஐத்த ஒட்டுமொத்த கூட்டு கர்ம பலன்!
இப்பிறவியில் நாம் அடையும் உடல்,தோற்றம்,குணங்கள்,மன எழுச்சி,திறமை,ஆர்வம்,விருப்பம் ஆகியவை சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;
நமக்கு ஏற்படும் பல பிறவிகளில் ஒரே மாதிரியான உடலும்,தோற்றமும்,திறமையும் அமைவதில்லை;இவை அனைத்தும் இறைசக்தியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

2.ப்ராரப்த கர்மா(விதி வினை அல்லது விதிப்பலன் வினை):
நமது நிகழ்கால பிறவிக்கு காரணமான கர்மபலன்!இது சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;இதனைத் தவிர்க்க இயலாது.பெருமளவிற்கு மாற்ற இயலாது.இந்த கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்;இதைத்தான் நாம் விதி என்கிறோம்.இதில் நற்பலன்,தீயபலன் ஆகியன அடங்கும்.
நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் சுகபோகங்களும்,செல்வச் செழிப்பும்,நமது வெற்றியும்,சாதனைகளும் முற்பிறவியின் நற்செயல்களால் ஏற்பட்டவை;

நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பமும்,துயரமும்,தோல்வியும் முற்பிறவியின் தீயச் செயல்களால் ஏற்பட்டவை.இதனை ஒவ்வொருவரின் ஜாதகமும் துல்லியமாகக் காண்பிக்கும்.இப்பிறவியில் ப்ராரப்த கர்ம பலனை முழுவதுமாக அனுபவித்து முடிந்ததும்,மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து மரணம் ஏற்படுகிறது.

இங்கே தான் எமது  ஜோதிட ஆலோசனை உங்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலாக மாறுகிறது;(இதற்கு எமது 27 வருட ஜோதிட மற்றும் ஆன்மீக அனுபவம் உங்களுக்கு துல்லியமாக வழிகாட்டுகிறது)

இதன் மூலமாக தாங்கள் எந்த கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும்?

எவ்வளவு காலம் வழிபட வேண்டும்?

ஏன் அப்படி அந்தக் கடவுளை கும்பிட வேண்டும்? அல்லது உபாசனை செய்ய வேண்டும்? என்ற சரியான ஆலோசனை கிடைக்கிறது.இவைகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கை லட்சியத்தை அடைய முடியும்;ஆன்மீக இலக்குகளைச் சென்றடைய முடியும்;பிறவிகளின் லட்சியத்தை/லட்சியங்களையும் அடைய வழிகாட்டிட முடியும்.


No comments:

Post a Comment