Thursday, April 7, 2016

முழுமுதற் பரமகுரு முத்துவடுகநாதர் ,சிங்கம்புணரி


சிங்கம்புணரி என்ற சிற்றூரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர் திரு.முத்துவடுகநாதர்;

இவர் திருநிறை பூவலத்தேவருக்கும்,திருவளர் குமராயி அம்மைக்கும் மகனாக அல்ல;மகானாக கி.பி.1736 இல் அவதரித்தார்;

மன்னர் பரம்பரையில் அவதரித்தமையால்,உறவுகளிடையே போட்டியும்,பொறாமையும் உருவானது;எனவே,இவரை இவரது தாயார் குமராயி அம்மாள் அவர்கள் இவரை சிங்கம்புணரிக்கு ஒரே நாளில் அழைத்துவந்துவிட்டார்;இங்கே கி.பி.1833 வரை வாழ்ந்தார்;

இவர் செய்த அற்புதங்களை எழுதத் துவங்கினால் 100 லட்சம் பக்கங்கள் காணாது;

இவர் இங்கே திருமணம் செய்து,இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்;இவரது வழித்தோன்றல்கள் இன்றும் இவரது ஜீவசமாதிக்குப் பூஜை செய்து வருகின்றனர்;

மங்கள மகாகாளியம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவராகியின் உபாசகராக வாழ்ந்து வந்த இவரை தொடர்ந்து வழிபட்டால்,அன்னை ஆதி வராகி(அரசாலை)யின் அருள் நமக்குக் கிட்டும்;

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இங்கே தங்கி நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ளலாம்;தொடர்ந்து 6 பவுர்ணமிகள் கலந்து கொண்டால் நமது நீண்டகால மாந்திரீகச் சிக்கல்கள்,கண்திருஷ்டி தீர்ந்துவிடும்;

தொடர்ந்து 3 பௌர்ணமிக்கு இங்கே வந்து பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால்,அன்னையின் அருளுக்குரிய சரியான குரு நமக்குக் கிட்டுவார்;

இவரை இப்பகுதியில் வாத்தியார் அய்யா என்று அன்போடும்,பாசத்தோடும் அழைக்கின்றனர்;


படத்தில் இருக்கும் இந்தப் படத்தை நமது செல்போன் வால்பேப்பராக வைத்துக் கொள்வோமே!


No comments:

Post a Comment