Thursday, October 13, 2011

ஆன்மீகக்கடல் வாசகர்களின் ஆதரவுடன் ஒரு கோடித் தமிழர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!









ஏன் ஒருகோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?

கலியுகத்தில் பிறந்துள்ள நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத் தான் செய்யும்.1.1.1995 முதல் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்தது.இதனால்,இந்தியாவில் எஃப் டிவியும்,அமெரிக்கா முதலான உலக நாடுகளில் சன் டிவியும் ஒளிபரப்பத்துவங்கியது.உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய இளைஞர் கூட்டம் நம் இந்தியாவில் இருக்கிறது.இந்த இளைஞர் சக்தியின் எண்ணிக்கை 45 கோடிகள்.(இங்கிலாந்தின் மக்கள் தொகை 13 கோடி மட்டுமே.அமெரிக்காவின் மக்கள் தொகை 30 கோடி மட்டுமே) இந்த இரண்டின் மக்கள் தொகையை விட இந்தியாவில் இளைஞர்கள் கூட்டம் அதிகம்.இருந்தபோதிலும்,இந்து தர்மத்தின் பெருமைகளை இந்த 45 கோடிபேர்களுக்கும் தலா ஓராண்டு கற்பித்தாலே இந்தியாவின் காஷ்மீர் பிரச்னை,நக்ஸலைட் பிரச்னை,இலங்கைத் தமிழர்கள் பிரச்னை,தமிழக மீனவர்கள் பிரச்னை,குடிதண்ணீர் பிரச்னை,சுற்றுச்சூழல் பிரச்னை தீர்ந்துவிடும்.ஆமாம்! இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,கோடி கோடியாக நமது அரசியல்வாதிகளால் நம்மையே கொள்ளையடிக்க முடியுமா?

அப்படி இளைஞர்கள்,இளம்பெண்கள் சிந்திக்காமல் இருக்கவும், எப்போதுமே அடிமுட்டாள்களாக இருக்கவுமே டிவிக்கள்,காமத்தை பொழுதுபோக்காக நினைக்க வைப்பது,முட்டாள்த்தனமாக கிரிக்கெட் மீது வெறிபிடிக்க வைப்பது(டிவியில் நேரடி ஒளிபரப்புதான் இத்தனை கோடி கிரிக்கெட் பைத்தியங்களை உருவாக்கியிருக்கிறது) என யுவ சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது எனக்கு வருத்தமளிக்கிறது.

இளைய சமுதாயத்திடம் கொஞ்சூண்டு பக்தியை விதைத்தாலே போதும்;அவர்கள் தடம் மாறிப்போவது நின்றுவிடும்;அதன்மூலம் காம நோய்கள் பரவுவது தடுக்கப்படும்;தவிர,இள மனதில் எது பதிகிறதோ,அதுவே அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தும்.பக்தி உணர்வு சிறிதளவு உண்டானாலே, இந்தியாவின் எதிர்காலம் சிறிதும் தீயதாக அல்லாமல்,சிறப்பானதாக அமையும்.தவிர,இந்தியாவை மையமாகக் கொண்டு சித்தர்களின் ஆட்சி வெகுவிரைவில் துவங்க இருக்கிறது.அப்படி துவங்கும்போது,ஆன்மீகரீதியான ஒரு மாபெரும் எழுச்சியை உருவாக்கிவிட்டால்,அடுத்து வரும் நூற்றாண்டும் ஆன்மீகசார்ந்த நூற்றாண்டாக இருக்கும்.கலியுகத்தின் தாக்கத்தை தடுத்தும் விட முடியும்.

அரசியல் சாராமல்,எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்திருக்காமல்,ஆன்மீகக் கடல் வாசகர்கள்,வாசகிகள் மட்டுமே சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு கோடிபேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும் என்பது ஆன்மீகக்கடல் வாசகர்களின் நேரடி சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதில் லிவிங் எக்ஸ்ட்ரா வாசகர்களும் கலந்து கொண்டனர்.இந்த முடிவு மஹாளயபட்சத்தன்று(27.9.2011 செவ்வாய்க்கிழமை) திரு அண்ணாமலையில் எடுக்கப்பட்டது.

இதை எப்படி செயல்படுத்தலாம் ?

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசுவிடுமுறை நாட்களில் வரும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கும் புராதனமான சிவாலயங்களுக்கு ஆன்மீகக்கடல் வாசகர்கள் செல்லுவர்.சென்று அன்று முழுவதும் அந்த கோவிலில் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாகவும்,கையடக்கப் புத்தகமாகவும் விநியோகிப்பர்.இப்படி டிசம்பர் 2012 வரையிலும் தொடர்ந்து செயல்படுத்துவோம்.

சனி , ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பிரதோஷம் மற்றும் அமாவாசை வந்தால்,ஆன்மீகக் கடல் வாசகர்கள் அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் இதே போல ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை பிரபலப்படுத்துவர்.

இதில் பிற ஆன்மீகக்கடல் வாசகர்களின் பங்களிப்பு என்ன?

விருப்பம் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் தலா 1000 நோட்டீஸ்களை(ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை) தமது சொந்தச் செலவில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு(மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்)அனுப்பி வைக்கலாம்.2012 டிசம்பர் வரையிலும் இவ்வாறு 3,00,00,000 ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை நோட்டீஸ் விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்.இந்த கலந்துரையாடலில் மதுரை,பரமக்குடி,வளைகுடா,இராணிப்பேட்டை,திருச்சி,பொள்ளாச்சி ,இராஜபாளையம் மற்றும் சென்னை வாசகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி! இந்த நோட்டீஸ் விநியோகத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பாக,எந்த ஊரில் எந்த கோவிலில் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்போகிறோம் என்பது நமது ஆன்மீகக் கடலில் அறிவிக்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் தமது பெயர்,ஊர்,தற்போது இருக்கும் ஊர்,செல் எண்போன்றவைகளை மின் அஞ்சலில் தெரிவித்தால்,அவர்களும் இந்த சிவத் தொண்டில் கலந்து கொள்ளலாம்.








2 comments:

  1. வணக்கம் அய்யா,


    உங்களின் எண்ணம் நிறைவேற
    இறைவனிடம் இறைஞ்சும்
    தொண்டன் !!

    ReplyDelete
  2. Arumaiana erpadu ayya! Ithil intha sireyenin pangalipaum payan padutha ella valla iraivan sarpaga kettu kolkiren! Ipadiku ungal Vasagan, Nanban, Thondan- Nageshwaradan from Chennai...

    ReplyDelete